Begin typing your search above and press return to search.
ஆந்திராவிற்கு கடத்த புதரில் மறைத்து வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
ஆந்திராவிற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசியை புதரில் மறைத்து வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS

பைல் படம்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மங்களம் - புதுப்பாளையம் சாலையில் ரோந்து பணியின் போது இருசக்கர வாகனத்தில் மூட்டைகள் ஏற்றி செல்வதை கண்டு போலீசார் பின் தொடர்ந்தனர்.
இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற மூட்டைகளை அருகில் உள்ள புதரில் வைத்திருந்த மூட்டைகளுடன் குவித்து வைத்தனர். சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சென்று அந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.
இந்த ரேஷன் அரிசி பெரியபாளையம், ஆரணி, குமார பேட்டை, புதுப்பாளையம், கொம்பு ரெட்டி கண்டிகை, தண்டலம், வடமதுரை, பேட்டை மேடு, பனப்பாக்கம், உள்ளிட்ட பகுதியில் உள்ள வசிக்கும் மக்களிடம் நேரடியாக சென்று குறைந்த விலைக்கு வாங்கி வந்து ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இந்த ரேஷன் அரிசியை, ஆந்திராவிற்கு கடத்துவதாக தெரியவந்தது. ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த முத்துராஜ், ஹரிகிருஷ்ணன் ஆகிய இரண்டு பேர் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், புதரில் பதுக்கி வைத்திருந்த 2டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.