/* */

ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்

Thiruvallur District News -பெரியபாளையம் அருகே ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டு மற்றும் ஏணியில் பள்ளி மாணவர்கள் பயணிக்கும் நிலை உள்ளது.

HIGHLIGHTS

ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் பள்ளி  மாணவர்கள்
X

ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டு மற்றும் பின்பக்க ஏணியில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்கிறார்கள்.

Thiruvallur District News -பெரியபாளையம் அருகே தனியார் பேருந்தின் பின்பக்க ஏணியில் நின்றபடி மாணவன் ஒருவன் பயணிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் பேருந்தின் பின்பக்க ஏணியில் பள்ளி மாணவன் பயணிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிளேஸ்பாளையம் முதல் மீஞ்சூர் வரை செல்லும் தனியார் பேருந்து ஆரணியை கடந்து புதுவாயல் செல்லும் வழியில் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் பயணிக்கின்றனர். அப்போது பேருந்தின் படிக்கட்டில் சிலர் தொங்கியபடி பயணித்த நிலையில் ஒரு மாணவன் பேருந்தின் பின்பக்க ஏணியில் நின்றபடி பயணித்துள்ளான். பேருந்தின் பின்பக்க ஏணியில் நின்றபடி ஆபத்தான முறையில் மாணவன் பயணிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பேருந்தின் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ய கூடாது என அறிவுறுத்தி வரும் நிலையில் மாணவன் ஒருவன் பின்பக்க ஏணியில் பயணித்துள்ளதால் இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது பழமொழி. பெரிய பாளையம் பகுதியில் நாள்தோறும் பஸ்களில் இது போன்று தான் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் பேருந்துகளில் மக்கள் பயணிப்பதால் ஒருவரை ஒருவர் நெருக்கி நின்று கொண்டு தான் பயணிக்கிறார்கள். மாணவர்கள் என்பதால் அவர்கள் வரும் ஆபத்தை உணராது ஏணியில் நின்று பயணிக்கிறார்கள். கூலி வேலைக்கும், கல்லூரிக்கும் மற்றும் ஏதாவது அலுவல் சம்பந்தமாகவோ அல்லது கடை மற்றும் வியாபாரத்திற்கோ செல்லும் பெண்களும் விட்டால் இதுபோன்று தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கிடைக்க வேண்டுமானால் அந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்பது தான்.

மேலும் சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் சென்னையிலிருந்து மின்சார ரயிலில் கும்மிடிப்பூண்டி நோக்கி பயணம் செய்தபோது சில கல்லூரி மாணவர்கள் பயங்கரமான ஆயுதங்களுடன் ரயில்வே பிளாட்பாரம் மீது உரசியபடி ஆபத்தை உணராமல் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் இது போன்று சம்பவங்கள் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கரணம் தப்பினால் மரணம் தான் என்ற சொல்லிற்கேற்ப மாணவர்கள் இதுபோன்று ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது நல்ல செயல் இல்லை என்றும் இதுபோன்ற ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களை அறிந்த காவல்துறையினர் இவர்களை கண்டித்தும் பயனில்லை என்றும் எனவே இது போன்ற செயலில் ஈடுபடும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 11:13 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்