/* */

மெய்யூர் கூட்டுறவு வங்கியில் ரூ.26 லட்சம் நகைக் கடன் தள்ளுபடி

மெய்யூர் கூட்டுறவு வங்கியில் ரூ.26 லட்சம் நகைக் கடன் தள்ளுபடி
X

தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை பயனாளிகளுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டது.

தமிழகத்தில் திமுக தேர்தல் வாக் குறுதியாக பதவியேற்றவுடன் 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது.

அதன்படி பதவியேற்றவுடன் தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டுறவு சங்கம் வங்கிகளில் ஏழை எளியோ ர் அடமானம் வைத்திருந்த நகை கடன்களை தள்ளுபடி செய்து அவரது நகைகளை திரும்ப அளித்து வந்தது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுக்க பூண்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மெய்யூர் பகுதியில் ஜெ. ஜெ. 736 வேளகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கவங்கியில் 30 பயனாளிகள் அடமானம் வைத்திருந்த நகைக ளான ரூ 25 லட்சத்து 67ஆயிரத்து தள்ளுபடி செய்து அவரது நகை களை திரும்ப அளித்ததனர்.

இதற்கான நிகழ்ச்சி கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்தில் நடைப் பெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக பூண்டி ஒன்றிய செயலாளர் டி.கே. சந்திர சேகரன், மாவட்ட கவுன்சிலர் சுதாகர், ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி ஏழுமலை, ஊராட்சி மன்றத் தலைவர் லாவண்யா சரத்பாபு, துணைத்தலைவர் மீனா பிரகாஷ், கூட்டுறவு சங்க சிறப்பு அதிகாரி விஜய் சரவணன், வங்கி செயலாளர் ஏழுமலை, திமுக நிர்வாகி சக்கரவர்த்தி, முன்னாள் தலைவர் குப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நகைகளை பயணாளிகளுக்கு திரும்ப அளித்தனர்.

நகைகளைப் பெற்ற பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்துச் சென்றனர்.

Updated On: 3 April 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!