Begin typing your search above and press return to search.
டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை: போலீசார் விசாரணை
கும்மிடிப்பூண்டி அருகே காய்லர்மேடு பகுதி டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
HIGHLIGHTS

பைல் படம்.
கும்மிடிப்பூண்டி அடுத்த காய்லர்மேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை நேற்று இரவு ஊழியர்கள் வழக்கம் போல் மூடி சென்றனர். பின்னர் காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 30 மதுபாட்டில்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து டாஸ்மாக் உழியர்கள் சிப்காட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.