/* */

வடிகால் வசதியுடன் புதிய தார் சாலை அமைத்துத் தர கோரிக்கை

பெரியபாளையம், அம்பேத்கர் நகர் சாலையை சீரமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

வடிகால் வசதியுடன்  புதிய தார் சாலை அமைத்துத்  தர கோரிக்கை
X

சாலையில் தேங்கிக்கிடக்கும் மழை நீர்.

மழைநீர் தேங்கி குண்டும் குழியான சாலையை சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெரியபாளையம் ஊராட்சிப் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்களும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலையானது மிகவும் பழுதடைந்து இப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சாலை மிகவும் மோசமாக மாறியுள்ளது.

சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. மழைக் காலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் அவ்வழியில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மழைநீர் தேங்கி நிற்கும் பள்ளங்கள் தெரியாமல் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி பலர் அதில் தவறி விழுந்து காயமடைந்துள்ளனர் என்பதும் மோசமான அனுபவம்.

மேலும், இந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என்று பலமுறை எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் ஊராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் கிராம சபை கூட்டங்கள் நடக்கும்போதும் இந்த சாலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தநிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் சூழலில் சாலைகளில் தேங்கும் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் குண்டும் குழியுமாக உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கின்றது. இதனால், வாகன ஓட்டிகள், பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ,மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கூடவே அவ்வாறு தேங்கி நிற்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை உருவாக்குகிறது.

இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய்கள் உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு விஷ காய்ச்சல்களும் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளதால் சாலையும் குறுகிப் போய்விட்டது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழைக்காலத்தில் மக்கள் அவதிப்படுவதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு சாலையை விரிவு படுத்தி, புதிய தார் சாலை அமைத்துத் தரவேண்டும்.

பல மாதங்களாக இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கும் சாலை அமைக்கும் பணியை விரைவாக முடித்து பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் வேலைக்கு சென்றுவரும் பொதுமக்கள் என அனைவருக்கும் உதவ வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 Nov 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது