/* */

தேர்வழி ஊராட்சியில் ரூ.19.5 லட்சத்தில் குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி எம்எல்ஏ திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தேர்வழி ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய மேல் நிலை குடிநீர் தொட்டியினை எம்எல்ஏ கோவிந்தராஜன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

தேர்வழி ஊராட்சியில் ரூ.19.5 லட்சத்தில்  குடிநீர் மேல்நிலைத் தேக்க  தொட்டி  எம்எல்ஏ திறப்பு
X

கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள தேர்வழி ஊராட்சியில் ரூ. 19.5 லட்சம்  செலவில் கட்டப்பட்ட  மேல்நிலைகுடிநீர் தொட்டியினை எம்எல்ஏ கோவிந்தராஜன் திறந்துவைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சியில் ரூ. 19.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டியை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் நேற்று துவக்கி வைத்தார்.

தேர்வழி பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அங்கு ரூ.19.5லட்சம் மதிப்பீட்டில் 60ஆயிரம்லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி கட்டப்பட்டது. திறப்பு விழா கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தேர்வழி ஊராட்சி தலைவர் கிரிஜா குமார் வரவேறார்.

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், ஒன்றிய கவுன்சிலர் அமலா சரவணன், ஒன்றிய பிரதிநிதி ராகவரெட்டிமேடு ரமேஷ், துுணை செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேல்நிலை குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை தேர்வழி ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Updated On: 7 Aug 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு