/* */

ஊத்துக்கோட்டையில் நீதிமன்றம் கட்டுவதற்கான இடம் குறித்து நீதிபதி ஆய்வு

ஊத்துக்கோட்டையில் நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை, நீதிபதி, வட்டாட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

ஊத்துக்கோட்டையில் நீதிமன்றம் கட்டுவதற்கான இடம் குறித்து நீதிபதி ஆய்வு
X

மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி ராதிகா, வட்டாட்சியர் ராமன், துணை வட்டாட்சியர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், ஊத்துக்கோட்டையில் நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், கடந்த 10வருடங்களுக்கு மேலாக நீதிமன்றம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது புதியதாக கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி ராதிகா, வட்டாட்சியர் ராமன், துணை வட்டாட்சியர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஊத்துக்கோட்டையில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார்.

பல்வேறு இடங்களை அப்போது பார்வையிட்டனர். ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் புதர்மண்டி கிடந்த இடத்தையும் அப்போது பார்வையிட்ட நீதிபதி ராதிகா நிலத்தின் அளவீடுகள் குறித்து வருவாய்துறையினரிடம் கேட்டறிந்தார். இந்நிலையில் நீதிமன்றத்தை ஊருக்கு வெளியே எடுத்து செல்ல கூடாது எனவும் ஊத்துக்கோட்டை நகர் பகுதியிலேயே அமைக்க வேண்டும் என, பொதுமக்கள், வழக்கறிஞர்கள் எனப் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இதில், அரசு வழக்கறிஞர் வெஸ்லி சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் மகேந்திரன் பொருளாளர் கன்னியப்பன் துணைத் தலைவர் சாமுவேல் துணை செயலாளர் பிரகாஷ் மற்றும் வழக்கறிஞர்கள் ராஜ்சேகரன், முனுசாமி, பொன்னுசாமி, குமார், சாந்தகுமார், சதீஷ், வாசுதேவன், தில்லைகுமார், ஜீவா உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

Updated On: 23 Jan 2022 7:00 AM GMT

Related News