/* */

கும்மிடிப்பூண்டியில் விலையில்லா ஆடுகள்: பயனாளிகளுக்கு எம்.எல்,ஏ கோவிந்தராஜன் வழங்கினார்..!

கும்மிடிப்பூண்டியில், தமிழக அரசின் சார்பில் விலையில்லா ஆடுகளை ஏழை, எளிய பயனாளிகளுக்கு எம்.எல்,ஏ வழங்கினார்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டியில் விலையில்லா ஆடுகள்: பயனாளிகளுக்கு எம்.எல்,ஏ கோவிந்தராஜன் வழங்கினார்..!
X
கும்மிடிப்பூண்டியில் அரசின் விலையில்லா ஆடுகளை பயனாளிகளுக்கு வழங்கிய எம்.எல்.ஏ கோவிந்தராஜன்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் தமிழக அரசின் கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு ஆடுகள் வழங்கி தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவில், சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.

கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.எச்.சேகர், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், துணை இயக்குனர் கோபி, உதவி இயக்குனர் கோபிகிருஷ்ணன் , கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், துணைத்தலைவர் மாலதி குணசேகரன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், ஒன்றிய ஆணையர் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், பேரூராட்சி செயல்அலுவலர் யமுனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 1,600 பயனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் ஏழ்மை நிலைமையிலுள்ள கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் தொழில் முனைவோராக அவர்களை உருவாக்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 100 பயனாளிகளுக்கு தற்போது ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

விழாவில்,பொறுப்புக்குழு உறுப்பினர் வெங்கடாசலபதி, ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 26 Jun 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!