/* */

பெரியபாளையம் அருகே புதிய துணை மின் நிலையம் காணொலி காட்சி மூலம் திறப்பு

CM News Today -பெரியபாளையம் அருகே புதிய துணை மின் நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல் அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

பெரியபாளையம் அருகே புதிய துணை மின் நிலையம்  காணொலி காட்சி மூலம் திறப்பு
X
பெரிய பாளையம் அருகே முதல் அமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்த துணை மின் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

CM News Today -பெரியபாளையம் அருகே ஒன்றரை கோடி ரூபாய் செலவில் 16 கிலோ வாட் திறன் கொண்ட புதிய துணை மின் நிலையத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை பெரியபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இப்பகுதியில் ௧௬ கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கவேண்டும் என்பதாகும். இதனை தொடர்ந்து அங்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் 16 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையத்தை அமைக்கப்பட்டது. அதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த வடமதுரை பகுதியில் உள்ள மின் நிலையத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி மின்விநியோகத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள 16 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் மூலம் விவசாய நிலங்கள் தங்கு தடையின்றி பயன் பெற முடியும். மேலும் வீடுகளிலும் குறைந்த மின் அழுத்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது நீண்ட கால பிரச்சினைக்கு தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளதால் பெரிய பாளையம் பகுதி மக்கள் தமிழக அரசுக்கும் முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கும், சம்பந்தப்பட்ட மின் வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உயர் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்.

இதில் மின்வாரிய அதிகாரி பாலச்சந்திரன், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.ஜெ.மூர்த்தி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சத்ய வேலு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே. வி.லோகேஷ், ஒன்றிய அவைத் தலைவர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், நிர்வாகிகள் வி.பி. ரவிக்குமார், டி.கே. முனிவேல், கே.வி. வெங்கடாசலம், பெரியபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, வடமதுரை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன், கவுன்சிலர் ஜமுனா, ஒன்றிய துணைச் செயலாளர் சிவாஜி, செல்லமுத்து, பார்த்திபன், தனசேகர், உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மின்வாரிய அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Nov 2022 9:08 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்