/* */

திருவள்ளூரில், இஸ்லாமிய மூதாட்டி குடும்பத்துடன் திடீர் தர்ணா போராட்டம்: போலீஸ் விசாரணையால் பரபரப்பு..!

திருவள்ளூரில், இஸ்லாமிய மூதாட்டி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்: போலீஸ் விசாரணையால் பரபரப்பு..!

HIGHLIGHTS

திருவள்ளூரில், இஸ்லாமிய மூதாட்டி குடும்பத்துடன் திடீர் தர்ணா போராட்டம்: போலீஸ் விசாரணையால் பரபரப்பு..!
X

திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் சொத்தை ஏமாற்றியதாக கூறி, திராவிட பாலு என்பவர் வீட்டு முன்பு இஸ்லாமிய குடும்பத்தினர் நடத்திய தர்ணா போராட்டம்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பஜார் தெருவைச் சேர்ந்த முனவருனிஷா (60). இவருக்கு மகன், மகள் உள்ளனர். மகனின் நண்பரான ஊத்துக்கோட்டை அருகே கீழ்கருமனூர் திராவிட பாலு என்பவரிடம் தொழில் தொடங்க ஒரு லட்சம் ரூபாய் கடனாக கேட்டுள்ளனர். அதற்கு திராவிட பாலு, தனக்குத் தெரிந்த நபர் ஒருவர் உள்ளார் எனவும் அவரிடம் தங்களின் சொத்துக்களுக்கு அடமானம் வைத்து பவர் அளித்தால் அதன் பெயரில் கடன் அளிப்பார் என்றும் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியில் உள்ள நிரஞ்சன் குமார் என்பவரிடம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு லட்சத்திற்கு மூவரும் சேர்ந்து பவர் பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தனர். பணத்தை சில மாதங்கள் கழித்து கொடுத்து பிறகு பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம் என நிரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். சில மாதங்கள் பணத்துடன் சென்று நிரஞ்சன் குமாரை சந்தித்தபோது திராவிட பாலு அந்த சொத்தின் மீது ரூபாய் 30 லட்சம் ரூபாய் கடன் பெற்று உள்ளதாகவும் அந்த பணத்தை திருப்பி தந்தால் மட்டுமே தங்களின் சொத்து மீதான பவரை ரத்து செய்து தருவேன் எனவும் இல்லை என்றால், தான் விற்று விடுவதாக தெரிவித்ததாக முனவருனிஷா குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

மேலும் சொத்து மற்றும் பவர் பத்திரம் குறித்து கேட்டால், திராவிட பாலு தம்மை குடும்பத்துடன் கொன்று விடுவதாக மிரட்டுகிறார் எனவும் முனவருனிஷா திடுக்கிடும் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, திராவிட பாலுவின் வீட்டின் முன்பு முனவருனிஷா மற்றும் அவரது மகள், மகன், மருமகள் மற்றும் கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற ஊத்துக்கோட்டை காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல புகார்கள் அளித்தும் தங்களது சொத்தை மீட்க முடியாமல் வேறுவழியின்றி சம்பந்தப்பட்ட நபர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக முனவருனிஷா குறிப்பிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 17 Jun 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...