/* */

திருவள்ளூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

Free Eye Operation Camp Report -திருவள்ளூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
X

திருவள்ளூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Free Eye Operation Camp Report -திருவள்ளூர் மாவட்டம் ஆலப்பாக்கம் கிராமத்தில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம், லயன்ஸ் கிளப் புரோஜனி இணைந்து நடத்தும் சங்கர நேத்ராலயா இலவச கண் சிகிச்சை முகாம் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஏ.டி. கண்ணன் தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் செந்தாமரைக்கண்ணன் மாவட்ட மகளிரணி செயலாளர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ஆறுமுகம் கலந்துகொண்டு கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னதாக அனைவரையும் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சரவணன்,பார்த்தசாரதி ஆகியோர் வரவேற்றனர் இதில் சங்கர நேத்ராலயா வின் 10.க்கு மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு கிராமத்தைச் சேர்ந்த 90 பேருக்கு கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 16 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 34 பேருக்கு மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சட்டத்துறை பாதுகாப்பு சங்கத்தின் எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், துணை செயலாளர் யுவராஜ், ஆகியோர் செய்திருந்தனர். இதில் இணைச் செயலாளர் நீலா ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வம் நன்றி கூறினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jun 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?