/* */

மழை நீரால் சூழப்பட்ட ஏனம்பாக்கம் நியாய விலைக்கடை : குடும்ப அட்டைதாரர்கள் அவதி

பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 2000.க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்

HIGHLIGHTS

மழை நீரால் சூழப்பட்ட ஏனம்பாக்கம்  நியாய விலைக்கடை : குடும்ப அட்டைதாரர்கள் அவதி
X

மழை நீரால் சூழப்பட்ட ஏனம்பாக்கம் நியாய விலைக்கடை

பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம் ஊராட்சியில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கும் நியாய விலை கடை கட்டடத்தை சுற்றி மழை நீர் தேங்கி நிற்பதால் கடைக்கு செல்லும் குடும்ப அட்டைதாரர்கள் அவதப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 2000.க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் இங்கு 300.க்கு மேற்பட்ட குடும்ப அட்டதாரர்கள் உள்ளனர் பகுதி மக்களுக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு ரூபாய் 2.10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டிடம் ஒன்று கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டிடம் பழுதடைந்து மேற்கூரை கீழ்தரை உள்ளட்டவை பழுதடைந்து சிமெண்ட் பூசுகள் உதிர்ந்து மழைக் காலங்களில் மழைநீர் ஆங்காங்கே கசிந்து அரிசி, பருப்பு, சர்க்கரை ,கோதுமை, எண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் நனைந்து வீணாகிறது. இது மட்டுமல்லாமல் சமீபத்தில் சில நாட்களாக பெய்து வந்த மழையினால் கட்டிடத்தைச் சுற்றி மழைநீர் செல்ல வழி இல்லாததால் கட்டிடத்தை சுற்றி தேங்கி நிற்கின்றது.

இதனால் அங்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர் எனவே இந்த பழைய கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் மழைநீர் நிற்காத வண்ணம் அந்தப் பகுதி சீர் செய்து தர வேண்டும் என குடும்ப அட்டைதாரர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 10 Sep 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!