திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் திராவிட மாடல் பாசறை கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் திராவிட மாடல் பாசறை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் திராவிட மாடல் பாசறை கூட்டம்
X

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் திருச்சி சிவா எம்.பி.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது. இதில் திராவிட கொள்கை பற்றாளர் நாஞ்சில் சம்பத், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்று தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கு திராவிடம் குறித்து எடுத்துரைத்தனர். அப்போது தி.மு.க.வின் 5கட்டளைகளை திருச்சி சிவா வாசிக்க இளைஞர்கள் அனைவரும் உறுதிமொழி ஒரே குரலில் வாசித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் சட்டத்தின் மாண்புகள் மங்கி வருகிறது என்றார்.

குடியரசுத் தலைவர் அரசியல் சட்டத்தின் பாதுகாவலர் என்றும் அரசியல் சட்டத்தின் மாண்பை காப்பாற்ற ஒருவர் வர வேண்டும் என்று யஸ்வந்த் சின்கா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். யஸ்வந்த் சின்கா வெற்றி பெற்று எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும் எனவும் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்வரும் 2024 பொது தேர்தலுக்கு முன்னோட்டம் என கூறலாம் என்றார்.

பா.ஜ.க.வின் குதிரை பேரம் குறித்த கேள்விக்கு பல மாநிலங்களில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும் அதிகாரத்தை பயன்படுத்தி பா.ஜ.க.வினர் ஏதேதோ செய்கிறார்கள் என்றார். மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சரியான நேரத்தில் சரியான தீர்ப்பளித்து மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றார். பிரதமர் மோடியின் பேச்சும், செயலும் வேறு வேறாக உள்ளது எனவும், நாடாளுமன்றத்தில் இருப்பார் ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் எனவும் திருச்சி சிவா குற்றம் சாட்டினார்.

Updated On: 29 Jun 2022 3:00 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தாமதம்; கோட்டையை முற்றுகையிட பாஜக...
 2. ஆன்மீகம்
  வசியப்பொருத்தம் இருந்தால்தான் கணவன்-மனைவி காதல் மிளிரும்..! எப்டீன்னு...
 3. சினிமா
  பொன்னியின் செல்வன் படத்திற்காக இணையும் ரஜினி, கமல்: சும்மா அதிருமுல்ல
 4. சினிமா
  சகோதரியுடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் யாஷ்
 5. தமிழ்நாடு
  கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்
 6. சினிமா
  அதிதியை திட்டாதீங்க பிளீஸ்: பாடகி ராஜலக்ஷ்மி
 7. கல்வி
  பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: முதல்வர் ஆலோசனை
 8. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
 9. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 10. காஞ்சிபுரம்
  மின்தடையை சீர்செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு