/* */

கும்மிடிப்பூண்டி எலாவூர் சோதனை சாவடியில் கரைபுரண்டு ஓடும் லஞ்சம்

கும்மிடிப்பூண்டி எலாவூர் சோதனை சாவடியில் லஞ்சம் கரைபுரண்டு ஓடுவதாக வாகன ஓட்டுநர்கள் புலம்பி வருகின்றனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி எலாவூர் சோதனை சாவடியில் கரைபுரண்டு ஓடும் லஞ்சம்
X

எளாவூர் சோதனை சாவடி.

சோதனை சாவடி என்பது மற்றொரு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களை சோதனை செய்வதற்காக அரசு சார்பில் பல்வேறு மாநிலங்களின் எல்லைப் பகுதியில் நிறுவப்பட்டதாகும். வாகனங்களில் ஏற்றப்பட்ட சரக்குகள் முறையாக அனுமதி பெற்றுள்ளனவா? அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள்தானா? என்பதை இங்கு கண்காணித்த பிறகுதான் வாகனங்களை தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

தற்போது தமிழகத்தில் புகையிலை உட்பட போதை பொருட்களை தடை செய்யப்பட்டுள்ளதால் சோதனை சாவடியில் லஞ்சம் கொடுத்துவிட்டு அவற்றை உள்ளே கொண்டு வரப்படுவதாகவும், அங்கீகரிக்கப்படாத பொருட்களையும், அனுமதி பெறாத பொருட்களையும் லஞ்சம் பெற்று தமிழகத்திற்குள் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்வது கிடையாது.

இதேபோன்ற ஒரு பெரும் ஊழல் சாம்ராஜ்ஜியம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் சோதனை சாவடியில் நடந்து வருவதாக மிகப்பெரிய அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆம்... அதை பற்றி விரிவாக காண்போம்.

தமிழக -ஆந்திர எல்லைப் பகுதியான திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழுகிணறு பகுதியில் 137 கோடியே 18லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு கணினி மயமாக்கப்பட்ட எளாவூர் அதிநவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியில் போக்குவரத்துத் துறை, காவல்துறை, வருவாய் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆகிய துறைகளுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனைச் சாவடியில் நவீன எடை மேடைகள், வாகனங்கள் அதிக அளவில் நிற்பதற்கான நிறுத்தங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள், கிடங்கு வசதிகள், சோதனைச் சாவடி நிலையங்கள், சாலை குறியீட்டு பலகைகள் மற்றும் நவீன மின்சார மற்றும் மின்னணு சாதனங்கள், கணினிமயம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கும் நாள்தோறும் இந்த சோதனை சாவடி வழியாக ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. வாகனங்களின் பொருட்கள், வாகனங்களுக்கேற்ப கட்டணங்களை அரசு நிர்ணயித்ததுள்ளது. இந்த கட்டணத்தை மட்டுமே அதிகாரிகள் வசூலிக்க வேண்டும். ஆனால் இங்கு ஊழல் தலைதெறித்து ஆடுகிறது. ஆர்.டி.ஓ.& அதிகாரிகள், தனியார் எழுத்தர்களை பணியில் அமர்த்தி கூடுதல் பணம் (லஞ்சம்) வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஒவ்வொரு வாகனத்திற்கும் அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேலாகவே அதிக கட்டணங்கள் வசூலித்து வருவதாகவும், இதன் வாயிலாக நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் கொள்ளை லாபம் அடைவதாகவும் பரபரப்பாக பேசும் பொருளாகியுள்ளது.

மேலும் இந்த ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில், தனியார் எழுத்தாளர்கள் மூலமே இதுபோன்ற லஞ்ச லாவன்யங்கள் நடைபெற்று வருகிறது. சுங்க சாவடி கட்டணங்கள் அதிகரித்தும் இந்த சோதனை சாவடியில் அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். இதனை மீறி கேட்டால் அதற்குரிய பிரச்சினைகளை தனியார் எழுத்தர்கள் மற்றும் அதிகாரிகள் மனசாட்சிக்கு புறம்பாக பேசுவதாகவும் வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.

எனவே இதுபோனற ஊழல் பெரிச்சாலிகளான அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் லஞ்ச ஒழிப்பு த்துறையை அதிகாரிகள் சமீபத்தில் பல்வேறு இடங்களில் சோதனை செய்து இந்த சோதனை சாவடியில் ஏன் சோதனை செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாநிலங்களுக்கிடையே செயல்பட்டு வரும் சோதனை சாவடியில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை இணைந்துள்ளது. மேலும் சோதனை சாவடியில் உள்ள காலி எழுத்தர் பணியிடங்களை படித்து பட்டம் பெற்ற வேலையில்லா இளைஞர்களை எத்தனையோ பேர் தகுதி உள்ளவர்களை தகுதி அடிப்படையில் பணியில் அமர்த்த வேண்டும். அவ்வாறு அரசு மூலம் வேலையில்லா இளைஞர்களை எழுத்தர்களாக நியமனம் செய்யும்போது ஊழல் நடைபெறுவது தடுக்கப்படும். மேலும் ஊழல் அதிகாரிகள், எழுத்தர்கள் மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் சீர்கேடு இதுபோன்ற செயல்களால்தான். இதனால் அரசு வருவாய் பாதிக்கப்படுவதுடன் பல இளைஞர்களின வேலைவாய்ப்பும் தடுக்கப்படுகிறது. எனவே முதல்வர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா? என சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 14 April 2023 1:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  2. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  3. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  6. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  7. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  9. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  10. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?