/* */

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து கவரப்பேட்டையில் ரயில் மறியலுக்கு முயற்சி: மாணவர் அமைப்பினர் 30 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்த மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து, குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து கவரப்பேட்டையில் ரயில் மறியலுக்கு முயற்சி: மாணவர் அமைப்பினர் 30 பேர் கைது
X

கும்மிடிப்பூண்டி அருகே அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்த மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். அக்னிபாத் திட்ட நகல்களையும் போராட்டத்தினர் தீயிட்டு கொளுத்தினர்

இதனை காவல்துறையினர் தடுக்க முயன்றபோது காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடரந்து காவல்துறையினர் தடுப்பை மீறி கவரைப்பேட்டை ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்றும், சிலரை குண்டுக்கட்டாகவும் தூக்கியும் பேருந்தில் ஏற்றினர்.

இதையடுத்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுமார் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Updated On: 23 Jun 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!