கும்மிடிப்பூண்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முப்பெரும் விழா

கும்மிடிபூண்டி அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கும்மிடிப்பூண்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முப்பெரும் விழா
X

கும்மிடிப்பூண்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

புது வாயலில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நீலமேகம் பங்கேற்று கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,புதுவாயல் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா,தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா,பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி இக்கட்சியில் இணையும் விழா என முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் புலியூர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் வக்கீல் ஜீவா முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து,தந்தை பெரியாரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து,பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி இக்கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லை சி.நீலமேகம் சிறப்புரை ஆற்றினார்.இதன் பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில்,நாடாளுமன்ற பொறுப்பாளர் வக்கீல் நெடுஞ்செழியன், கும்மிடிப்பூண்டி பொறுப்பாளர்கள் சுகுமார்,விமல்,கும்மிடிப்பூண்டி தொகுதி துணைச்செயலாளர் ராள்ளை பாபு,சமூக சேவகர் கிங்பால்,சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் காந்தி, மாவட்ட ஊடக பிரிவு பொறுப்பாளர் கோபி, சோழவரம் தெற்கு ஒன்றிய பொருளாளர் மதன், மகளிர் அணி பொறுப்பாளர்கள் மோத்தி, லலிதா,புதுவாயல் முகம் கிளைத்தலைவர் கிருஷ்ணன், செயலாளர் பாக்யராஜ், பொருளாளர் வரதன் உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூர், கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Sep 2023 9:30 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
 3. குமாரபாளையம்
  அகில இந்திய மல்யுத்த போட்டி: குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்
 5. ஈரோடு மாநகரம்
  ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
 6. ஈரோடு மாநகரம்
  ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில்...
 7. தென்காசி
  தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
 8. சினிமா
  நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக கணவர் போனி கபூர் மீண்டும் சர்ச்சை
 9. தென்காசி
  தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
 10. ஆலங்குளம்
  மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை