கும்மிடிப்பூண்டியில் 123 யோகா மாணவர்கள் இலகுவஜ்ராசனத்தில் உலக சாதனை
பால கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் யோகா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எலைட் தனியார் பள்ளியில் 123 யோகா மாணவர்கள் இலகுவஜ்ராசனத்தில் உலக சாதனை படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பால கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் யோகா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
வினா ஸ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரும், யோகா வாழ்நாள் சாதனையாளர் மற்றும் சிறந்த யோகா பயிற்சியாளர் விருது பெற்ற காளத்தீஸ்வரன் ஏற்பாட்டில், மாபெரும் யோகா உலக சாதனை நடந்தது.
இந்நிகழ்வில் உடலை பின்புறம் வில்லாக வளைத்து மூச்சை அடக்கி செய்யக்கூடிய மிகவும் கடினமான லகு வஜ்ராசனதை ஒரே நேரத்தில் 123 யோகா மாணவர்கள் பங்கேற்று, 100 வினாடிகள் நிகழ்த்தி அசத்தினார்கள். இச்சாதனை நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 123 மாணவர்களுக்கும் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இச்சாதனைக்கு வித்திட்ட வாழ்நாள் சாதனையாளர் காலத்தீஸ்வரன் மற்றும் வினா ஸ்ரீ யோகா பயிற்சி மையத்தின் ஆசிரியர்கள் வித்யா, அர்ச்சனா ஆகிய யோகா பயிற்சி ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாதவரம் வட்டாட்சியர் நித்தியானந்தம், எலைட் குழுமம் சி.எ.ஓ பால் சபாஸ்டின், முதல்வர் கீதா ஆகியோர் பங்கேற்றனர்.