/* */

உடுமலை; அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

Tirupur News,Tirupur News Today- உடுமலையில் உள்ள அமராவதி அணையில் இருந்து, இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

உடுமலை; அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
X

Tirupur News,Tirupur News Today- அமராவதி அணை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு வரும் ஜூன் 1 முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பினர். அதிகாரிகள் கூறுகையில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1 முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டதும் நீர் திறக்கப்படும் என்றனர்.

மேலும் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. பாசன பகுதிகளிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கரும்பு அறுவடை முடிந்ததும் கட்டை கரும்பு மற்றும் நடவு மேற்கொள்ள அமராவதி அணையில் இருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.ஜூனில் தென்மேற்கு பருவ மழை துவக்கியதும் அணை நீர் இருப்பை பொருத்து நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று முதல் உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை பழைய பாசனத்திற்கு உட்பட்ட முதல் 8 பழைய ராஜ வாய்க்கால்களின் (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசனப்பகுதிகளுக்கு ஜூன் 1-ம் தேதி (இன்று) முதல் அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Updated On: 1 Jun 2023 12:57 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  3. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  6. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  7. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  9. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்