உடுமலையில் கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தம்; ஸ்டாலினுக்கு ‘பறந்த’ புகார் மனு

tirupur News, tirupur News today- உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களுக்கு காலை, மாலை நேரங்களில் இயக்கப்பட்ட பல பஸ்கள் நிறுத்தப்பட்டதால் அவதிப்படும் பொதுமக்கள், தமிழக முதலமைச்சருக்கு புகார் மனு அனுப்பினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உடுமலையில் கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தம்; ஸ்டாலினுக்கு ‘பறந்த’ புகார் மனு
X

tirupur News, tirupur News today- உடுமலையில் கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தம்; மக்கள் வேதனை (கோப்பு படம்)

tirupur News, tirupur News today- திருப்பூர் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்பட்ட பல பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, தமிழக முதலமைச்சருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

உடுமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொழில் நிமித்தமாகவும் பல்வேறு பணிகளுக்காகவும் உடுமலை நகருக்கு வருகின்றனர். மேலும், பல சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உடுமலையில் படித்து வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அனைத்து கிராமப்புற பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில், கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது,

பொதுவாக காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பஸ் பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். அந்த நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், கூடுதல் பஸ்களை இயக்குவதற்குப் பதிலாக, கடந்த சில மாதங்களாக ஏற்கனவே கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்பட்ட பல பஸ்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பஸ் போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் ஆட்கள் பற்றாக்குறை, பஸ் பழுது என ஏதேனும் மழுப்பலான பதில் சொல்கின்றனர். இதனால் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் பஸ்களில் உயிரைப் பணயம் வைத்து, படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் அவல நிலை உள்ளது.

பள்ளி குழந்தைகளும், பெண்களும் பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதால் இதுபோன்ற கிராமப்புற பஸ்களில் வருவாய் குறைவாக இருப்பது பஸ்கள் இயக்கம் குறைக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பது பொதுமக்களின் எண்ணமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் அனைத்து கிராமப்புற வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

இந்தநிலையில் உடுமலையை அடுத்த புங்கமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அதில் பூலாங்கிணறு, பாப்பனூத்து, விளாமரத்துப்பட்டி, சாளையூர், கொடிங்கியம், எரிசனம்பட்டி, கரட்டுமடம், தேவனூர்புதூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளை இணைக்கும் வகையில் இயக்கப்பட்ட பல பஸ்கள் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

கிராமப்புற மக்களின் போக்குவரத்தில், அரசு டவுன் பஸ்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பணி சார்ந்தும், தொழில், வியாபாரம் சார்ந்தும் பலரும் பஸ்களில் தினமும் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏழை எளிய மக்கள், பஸ்களையே நம்பியுள்ள நிலையில், பஸ்களின் போக்குவரத்தை, கிராமப்புறங்களுக்கு அதன் இயக்கத்தை நிறுத்துவது பல விதங்களில் கிராமப்புற மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.

Updated On: 18 March 2023 5:02 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஓட்டுநர் உரிமம் தொலைந்தாலும் மீண்டும் எளிதாக பெற வாய்ப்பு
 2. தமிழ்நாடு
  பாகுபலியானார் எடப்பாடி பழனிசாமி: கோவை அ.தி.மு.க.வினர் வைத்த கட்அவுட்
 3. சினிமா
  எம்.ஜி.ஆரும் தென்னிந்திய நடிகர் சங்கமும்
 4. தமிழ்நாடு
  சாதி, மதம் இல்லா முதல் சான்றிதழ்: சினேகாவை பாராட்டிய நடிகை குஷ்பு
 5. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் இருந்து பங்குனி உத்திர பூஜைக்கு 1000 காவடிகள்...
 6. கரூர்
  கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி
 7. கல்வி
  employment training workshop-JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும்...
 8. கரூர்
  பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்துக்கு ரூ. 1 கோடி...
 9. தூத்துக்குடி
  அண்ணன் பாணியில் தங்கை: சாலையோர கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி...
 10. கரூர்
  கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்