Begin typing your search above and press return to search.
தொடரும் மழை: வேகமாக நிரம்பும் உடுமலை திருமுர்த்தி அணை
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், உடுமலை திருமூர்த்தி அணை, வேகமாக நிரம்பி வருகிறது.
HIGHLIGHTS

உடுமலை, திருமூர்த்தி அணையின் எழில்மிகு தோற்றம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பிரதான நீர்தேக்க அணையான, திருமூர்த்தி அணை, மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. இப்பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், பரம்பிக்குளம், ஆழியாறு பாசனத்தில், நான்காம் மண்டல பாசனத்துக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம், 3ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
பாசனப்பகுதியில், தற்போது பெய்து வரும் கனமழையால், அடுத்து சுற்றுக்கு தண்ணீர் திறப்பது தாமதமாகி வருகிறது. காண்டூர் கால்வாய் வழியாக, வினாடிக்கு, 873 கன அடியும், பாலாறு வாயிலாக, வினாடிக்கு, 64 கன அடியும் தண்ணீர் அணைக்கு வந்துக் கொண்டிருக்கிறது. இதனால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில், 2 அடி உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம், மொத்தமுள்ள, 60 அடியில், 45.97 அடியாக இருந்தது.