/* */

திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள்; உடுமலை ஒன்றிய கிராமங்களில் ‘வேகம்’

Tirupur News,Tirupur News Today- திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள், உடுமலை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில், வேகமெடுத்து வருகிறது,

HIGHLIGHTS

திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள்; உடுமலை ஒன்றிய கிராமங்களில் ‘வேகம்’
X

Tirupur News,Tirupur News Today- திடக்கழிவு மேலாண்மை திட்டம் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- ஊராட்சிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக ஊராட்சிகளில் சுகாதாரம் காக்கப்படுகிறது.

திடக்கழிவு மேலாண்மை என்பது வீடுகள்,வணிகவளாகங்கள், தொழிற்சாலைகளில் இருந்து கிடைக்கும் தேவை இல்லாத பயன்படுத்தப்பட்ட திடப்பொருள்களை சரியான முறையில் மறுபடியும் உபயோகிப்பதற்கான வழிவகைகளைச் செய்வதாகும் . திடக்கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. உதாரணமாக காகிதம், ரப்பர்,பிளாஸ்டிக் பொருள்கள் , கண்ணாடிகள் , தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகள் போன்றவை ஆகும்.

திடக்கழிவுகள் அதிக அளவில் வீடுகள், அலுவலகங்கள் , மருத்துவமனைகள் , கல்வி நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் , வேளாண் கழிவுகள் , நகராட்சி கழிவுகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெறுகிறது.

திடக்கழிவுகளின் வகைகள்

சிதைவடைவன - இவை நுண்ணுயிரிகளால் எளிதில் சிதைவடையும்.(எ.கா) இறந்த தாவரங்கள் , விலங்குகளின் உடல்கள் மற்றும் காய்கறி கழிவுகள்

சிதைவடையாதவை- இவை நுண்ணுயிரிகளால் எளிதில் சிதைவடையாது.(எ.கா) பிளாஸ்டிக் , டயர்கள், கண்ணாடி மற்றும் உலோகங்கள்

சாம்பல் - மரக்கட்டை, நிலக்கரி போன்றவை எரிபொருளாக பயன்படுத்தும் போது கிடைக்கும் சாம்பல் ஆகும்.

கட்டுமான திடக்கழிவுகள்- கட்டிடங்கள் கட்டும் போதும் , இடிக்கும் போதும் வெளிப்படும் கழிவுகள் ஆகும்.(எ.கா) கற்கள் மற்றும் மின்சாதனப் பொருள்கள் .

நச்சுத் திடக்கழிவுகள்- இவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகள் .(எ.கா) உலோகங்கள் (குரோமியம் , பாதரசம், காட்மியம் ) மற்றும் பூச்சிக்கொல்லிகள் , வெடிபொருள்கள், மருத்துவமனை கழிவுகள் மற்றும் கதிரியக்கத் தனிமக் கழிவுகள்

வேளாண் கழிவுகள்- வேளாண் பொருள்களை பயன்படுத்தியது போக மீதம் உள்ளவை இந்த கழிவுகள் .(எ.கா) நெல் உமி, தவிடு, கரும்புச்சக்கை, கரும்புத்தோகை, சோளத்தட்டை, பண்ணைக்கழிவுகள், தென்னைக் கழிவுகள் ஆனால் இவற்றால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை .

கழிவுநீர் சுத்திகரிப்பு கழிவுகள்- கழிவுநீர் சுத்திகரிக்கும் போது வெளிவரும் திடக்கழிவுகளாகும்.

திடக்கழிவுகளின் விளைவுகள்

இக்கழிவுகளை எரிக்கும் போது காற்று மண்டலத்தையும் , மண்ணில் இடும் போது நிலத்தையும் மற்றும் நீரினையும் மாசுபடுத்துகிறது. மருத்துவமனைக் கழிவுகள் பல நோய்கள் ஏற்படக் காரணமாகிறது . காகிதக் கழிவுகள் மற்றும் உலோகங்கள் போன்றவற்றை மறுசுழற்சி செய்யும் போது சுவாசக் கோளாறுகள், கண் எரிச்சல் மற்றும் இரைப்பை தொற்று நோய் ஏற்படுகிறது . குளோரின் உள்ள திடக்கழிவுகளை எரிக்கும் போது அதிலிருந்து வெளிவரும் டையாக்ஸின் , ப்யூரான் வாயுக்களை சுவாசிக்கும் போது மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. நச்சுக் கழிவுகள் உணவுச் சங்கிலி மூலம் உடலில் சேமிக்கப்பட்டு புற்றுநோய் உண்டாக்குகிறது .அதனால், திடக்கழிவினை மேலாண்மை செய்தல் மிகவும் முக்கியமாகிறது.

உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. கிராமங்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் முறை செயல்படுத்தவும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் தூய்மைப்பணியாளர்கள் கழிவுகளை சேகரித்து மக்கும், மக்காதவையாக தரம்பிரித்து உரம் தயாரிப்பதற்கான பணிகளிலும் ஈடுபடுகின்றனர். திடக்கழிவு மேலாண்மைக்கென ஒவ்வொரு ஊராட்சியிலும் உரம் தயாரிப்பதற்கான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மக்கும் கழிவுகளை உரக்குழிகளில் குறிப்பிட்ட நாட்களுக்கு கொட்டி வைத்து அவற்றை உரமாக்குகின்றனர்.இத்திட்டம் தற்போது 38 ஊராட்சிகளில் 10க்கும் குறைவானவற்றில் தான் முழுமையான செயல்பாட்டில் உள்ளது. மற்ற ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. தூய்மைப்பணியாளர்கள் பற்றாக்குறை, இடவசதியின்மை உள்ளிட்ட காரணங்களால் பெரும்பான்மையான ஊராட்சிகளில் திடக்கழிவு கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது திட்டத்தை புதுப்பிக்கும் வகையில் ஒவ்வொரு கட்டமாக மேம்பாட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது,

முதற்கட்டமாக உரம் தயாரிக்கும் குடில்கள் மோசமாக இருப்பது, இடவசதி இல்லாதது ஆய்வு நடத்தப்பட்டு தற்போது 17 ஊராட்சிகளில் குடில்கள் புதுப்பிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.15வது மானிய குழு நிதியில், இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் கட்டமைப்புகளை புதுப்பிக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் உரக்குழிகள் நிறைந்துள்ள நிலையில் புதிய குழிகள் அமைப்பதற்கான பணிகளும் நடக்கிறது. அனைத்து ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

தமிழக அரசும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Updated On: 11 Jun 2023 6:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  2. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  4. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  5. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  6. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  9. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  10. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!