Begin typing your search above and press return to search.
பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதியால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
HIGHLIGHTS

பஞ்சலிங்க அருவி (பைல் படம்).
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மூலிகை கலந்த தண்ணீர் வருவதால், அருவியில் குளிப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை, விசேஷ நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். கொரோனா பிரச்னை காரணமாக , அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அருவியில் குளிக்க தடை விதிப்பதால், பல மாதங்களாக அருவி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில்,அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. பல மாதங்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.