/* */

உடுமலை - மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம்; வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

Tirupur News,Tirupur News Today- உடுமலை மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உடுமலை - மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம்; வாகன ஓட்டிகளுக்கு  எச்சரிக்கை
X

Tirupur News,Tirupur News Today- யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today-உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வன சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தேவையான உணவு தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் அளித்து அடைக்கலம் கொடுத்து வருகிறது.

ஆனால் கோடை காலத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகிற ஆறுகள், நீர்வரத்தை இழந்து விடுவதால் வனமும் பொலிவு இழந்து விடுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதைத்தொடர்ந்து உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அடர்ந்த வனப்பகுதியில் பயணித்து, வன விலங்குகள் அடிவாரப் பகுதியை அடைகிறது. அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை கொடுத்து திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் அடைக்கலம் கொடுத்து வருகிறது. இதனால் அணை மற்றும் அடிவாரப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

வனவிலங்குகள் மாலை நேரத்தில் அமராவதி அணைப்பகுதியில் முகாமிடுவதுடன் காலை வேளையில் உடுமலை மூணார் சாலையில் கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கின்றன. இதனால் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மலை அடிவாரப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பசி தாகத்தோடு வருகிற வனவிலங்குகள் எதிர்பாராத விதமாக கம்பி வேலிகளை சேதப்படுத்திவிட்டு விலை நிலங்களுக்குள் புகுந்து விடுவதும் வாடிக்கையாக உள்ளது.

அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அடிவாரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனவிலங்குகள் உடுமலை மூணாறு சாலையை கடக்க முற்பட்டால் வாகன ஓட்டிகள் அமைதி காக்குமாறும் அவை சாலையை கடந்த பின்னர் வாகனங்களை இயக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் வனவிலங்குகள் மிறட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவது, கற்களை வீசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 9 Jun 2023 5:36 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...