Begin typing your search above and press return to search.
தீப்பிடித்து எரிந்த மரம்: மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு
உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த மரம், தீப்பிடித்து எரிந்தது.
HIGHLIGHTS

மரத்தில் பற்றிய தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில், பல ஆண்டுகளாக பழமையான மரம் உள்ளது. இந்த மரத்தையொட்டி இருந்த குப்பைக்கு சிலர் தீ மூட்டினர். தீ மரத்துக்ம் 'மளமள'வென பரவியது. தகவலறிந்த உடுமலை தீயணைப்புத் துறையினர் சம்பவம் இடம் வந்து, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால், சேதம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் சில நிமிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.