/* */

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

காங்கயத்தில், வீட்டு கதவை உடைத்து, பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள், ரூ. 4.5 லட்சம் பணத்தை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

காங்கயத்தில், 12 பவுன் நகைகள், ரூ. 4.5 லட்சம் திருடு போனது.

காங்கயத்தில் 12 பவுன் நகை, ரூ.4.5 லட்சம் திருட்டு

காங்கயம், அய்யாசாமி நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 57). காங்கயத்தில் உள்ள சர்வோதய சங்கத்தில் மேலாளர். இவருக்கு கடந்த 26-ம்தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அனைவரும், கோவை தனியார் மருத்துவமனையில் இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை வெங்கடாசலத்தின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவுபூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த காங்கயம் போலீசார் அங்கு வந்து, விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை, ரூ.4.5 லட்சம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.

மூதாட்டியிடம் நகைபறித்த இருவர் கைது

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி, குன்னாங்கல் பாளையத்தை சேர்ந்த மாரப்பன் மனைவி சிவகாமி(வயது 65). இவர் கடந்த 20-ம் தேதி தோட்டத்தில் கறவை மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், சிவசாமியிடம் பேசியபடியே அந்த வாலிபர் திடீரென்று சிவகாமி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சித்தார். இதனைத் தெரிந்து கொண்ட சிவகாமி கழுத்துடன் சேர்த்து தங்கச் சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மூதாட்டியை தாக்கி விட்டு, தங்க சங்கிலியை மீண்டும் பிடித்து இழுத்த போது அது இரண்டாக அறுந்தது. ஒரு பவுன் தங்கச் சங்கிலி மூதாட்டி கையிலும், 3 பவுன் தங்கச் சங்கிலி அந்த வாலிபரிடமும் சிக்கியது. இதையடுத்து, அந்த வாலிபர் வெளியே ஓடி வந்து தயாராக பைக்கில் காத்திருந்த அவரது நண்பருடன் தப்பினார். காயம் அடைந்த மூதாட்டி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் சின்னக்கரை பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், பைக்கில் வந்த வட மாநில வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மதுசூதனன் மொகந்தி (36) மற்றும் பில்வாசிதாஸ்(35) என்பதும், குன்னாங்கல்பாளையம் பகுதியில் மூதாட்டியை தாக்கி 3 பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை பலி

காங்கயம் அருகே சாம்பவலசு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் அபிவர்ஷன் (வயது 3). நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே அந்த பகுதியை சேர்ந்த சில குழந்தைகளுடன் சேர்ந்து, அபிவர்ஷன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அபிவர்ஷனை அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது அருகில் உள்ள ஒரு வீட்டின் தரைத்தள தண்ணீர் தொட்டியில், குழந்தை அபிவர்ஷன் தவறி விழுந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர், அபிவர்ஷனை தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விசைத்தறி தொழிலாளி கடத்தல்; நிதி நிறுவன உரிமையாளர் கைது

குன்னத்தூர் அருகே உள்ள காவுத்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பகவதி (வயது 45).‌ விசைத்தறி தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு, ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தைச் சேர்ந்த கருப்புசாமி (55) என்பவரிடம், கடனாக ரூ.40 ஆயிரம் பெற்றிருந்தார். இதற்காக பகவதி மாதந்தோறும் கருப்புசாமிக்கு வட்டி கொடுத்துள்ளார். ஆனால், கடந்த வாரம் கருப்புசாமி, 'எனக்கு வட்டி பணம் வேண்டாம். அசல் பணம் வேண்டும்,' என்று பகவதியிடம் கேட்டுள்ளார். அதற்கு பகவதி, 'உடனே கேட்டால் என்னால், எப்படி பணத்தை கொடுக்க முடியும். இந்த மாதம் கடைசியில் தருகிறேன்,' என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் பகவதியின் வீட்டிற்கு வந்த ஒருவர், கருப்புசாமி வருமாறு கூறியதாக, பகவதியை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் வழியிலேயே கருப்புசாமி, மேலும் 3 பேருடன் காரில் காத்திருந்து, பகவதியை தனது காரில் ஏற்றிக் கொண்டு விஜயமங்கலத்தில் உள்ள வீட்டிற்கு கடத்திச்சென்றுள்ளார். அங்கு சென்றதும், கருப்புசாமி பகவதியிடம், 'எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடு,' என்று கேட்டு மிரட்டினார். இதனால் பகவதி, தனது மகளுக்கு போன் செய்து ரூ.5 ஆயிரம் கேட்டார். அதன்படி அவரும் விஜயமங்கலத்துக்கு வந்து ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அதன் பின்னர் பகவதியை அவர்கள் விட்டனர். அத்துடன் மீதி பணத்தை கொடுத்த பின், அவரது பைக்கை எடுத்துச் செல்லுமாறு கருப்புசாமி கூறினார். இது பற்றி பகவதி குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில் கருப்புசாமி, கடனுக்காக தன்னை காரில் கடத்தி சென்றார் என்றும் கூறியிருந்தார். குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கருப்புசாமியை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 30 Oct 2022 7:08 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?