/* */

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

Crime News in Tamil -பொங்கலூர் அருகே காரும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த விபத்துகள், குற்றச்சம்பவங்களின் தொகுப்பு.

விபத்தில் இரண்டு பேர் பலி

Crime News in Tamil -பொங்கலூர் அருகே உள்ள வாவிபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் தனபால் (வயது 25). பனியன் நிறுவன தொழிலாளி. கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகே உள்ள மங்களத்தைச் சேர்ந்த மணி மகன் அருண் (20). பைக் மெக்கானிக். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதால், நேற்று முன்தினம் மதியம் வாவிபாளையத்திலிருந்து ஸ்கூட்டரில், பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பல்லடம் -உடுமலை சாலையில், வாவிபாளையத்தை அடுத்த குள்ளம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது திருப்பூரிலிருந்து மூணாறு நோக்கி வந்த கார், எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் சென்ற தனபால், அருண் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். சிறிது நேரத்தில் தனபால் மற்றும் அருண் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காமநாயக்கன்பாளையம் போலீசார் இருவரது உடல்களையும், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த திருப்பூரை சேர்ந்த கார்த்திகேயன் (43) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

சூதாட்டம்; ஆறு பேர் கைது

முத்தூர் அருகே தென்னங்கரைப்பாளையம் கிராம பகுதியில் பணம் வைத்து, சூதாட்டம் நடப்பதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வெள்ளகோவில் போலீசார், அப்பகுதிக்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தென்னங்கரைப்பாளையம் கிராம பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது. அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த முத்தூர் பகுதியை சேர்ந்த சேனாதிபதி (வயது 55), ராமசாமி (57), ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (27), விளக்கேத்தி பகுதியை சேர்ந்த குப்புசாமி (58), ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (28), உடுமலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (44) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விபத்தில் கல்லுாரி மாணவர் பலி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி- உடுமலை ரோட்டை சேர்ந்த இஸ்மாயில் மகன் ஆரியான் (வயது 20). இவர் கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் உடுப்பிக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார். இந்நிலையில், இவர் மட்டும் திருப்பூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு திரும்பி வந்தார். பிறகு நேற்று முன்தினம் காலை, நண்பர் ஒருவரின் மோட்டார் பைக்கை வாங்கி கொண்டு பல்லடத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு புறப்பட்டார். குமார் நகர் சிக்னல் அருகே சென்ற போது, பின்னால் வந்த சரக்கு வேன் மோட்டார் பைக் மீது மோதியது. அப்போது கீழே விழுந்த ஆரியான் மீது, வேனின் பின்சக்கரம் ஏறியது. ஹெல்மெட் அணிந்திருந்தும் அது உடைந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஆரியான் உயிரிழந்தார். சரக்கு வேன் 20 மீட்டர் தூரத்திற்கு மோட்டார் பைக்கை இழுத்து சென்றது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார், சடலத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரக்கு வேன் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதைதொடர்ந்து குமார் நகர் சிக்னல் அருகே சாலையின் இருபுறமும் வேகத்தை கட்டுப்படுத்த, போலீசார் இரும்புத்தடுப்புகளை வைத்தனர்.

விபத்தில் விவசாயி பலி

திருப்பூர் ஊத்துக்குளி அருகே உள்ள அணைப்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பநாயக்கர் (வயது67). அவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அணைப்பாளையம் பிரிவு அருகில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. தலையில் பலத்த காயம் அடைந்த பாப்பநாயக்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு போகும் வழியில், அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 Oct 2022 10:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...