/* */

நூல் விலை உயர வாய்ப்பில்லை; பனியன் உற்பத்தியாளர்கள் 'ரிலாக்ஸ்'

பஞ்சு வரத்து அதிகரித்துள்ளதால், நுால் விலை தற்போதைக்கு உயர வாய்ப்பில்லை என்பதால், பனியன் உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நூல் விலை உயர வாய்ப்பில்லை; பனியன் உற்பத்தியாளர்கள் ரிலாக்ஸ்
X

பஞ்சு வரத்து அதிகரிப்பால், கட்டுப்பாட்டுக்குள் வந்தது நூல் விலை. (கோப்பு படம்)

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஜவுளித் தொழிலுக்கு சம்பந்தமில்லாத மற்ற நிறுவனங்கள் பஞ்சை வாங்கி பதுக்கி வைத்தன. இதனால், செயற்கை தட்டுப்பாடு உருவாக்கி பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்தது.அதாவது ஒரு கேண்டி (356 கிலோ) 65 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அடுத்தடுத்த சில மாதங்களில் 1.05 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது. பருத்தி - பஞ்சு வர்த்தகம் வெளிப்படையாகவும், 'ஆன்லைன்' வாயிலாகவும் நடப்பதால் யார் வேண்டுமானாலும் பருத்தி கொள்முதல் செய்து கொள்கின்றனர். இதனால் தேவையான நூற்பாலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. கடந்த ஆண்டில் இடையே இருந்தவர்கள் லாபம் ஈட்டியதால் விவசாயிகளும் உஷாராகி விட்டனர்.

இந்தாண்டும் பஞ்சு விலை உயரும் என விவசாயிகள் காத்திருந்தனர். அக்டோபர் மாதம் துவங்கி, 3மாதங்களாக பஞ்சு வரத்து குறைவாகவே இருந்தது. சாதாரணமாக தினமும் இரண்டு லட்சம் பேல் விற்பனைக்கு வரும் நிலைமாறி ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சில நாட்களாக பருத்தி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 19ந் தேதி 1.17 லட்சம் பேல்களாக இருந்த பருத்தி வரத்து 20-ம் தேதி 1.20 லட்சம் பேல்களாக அதிகரித்தது. கடந்த 21-ம் தேதி 1.31 லட்சம் பேல் அளவில் இருந்தது நேற்று 1.51 லட்சம் பேல்களாக அதிகரித்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகே பஞ்சு வரத்து அதிகரித்துள்ளதால் இனியும் பஞ்சு விலை உயர வாய்ப்பில்லை என தொழில்துறை நிம்மதி அடைந்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் கூறியதாவது,

சீசன் துவங்கிய 3 மாதங்களுக்கு பிறகு, பருத்தி வரத்து அதிகரித்துள்ளது. பஞ்சு விலை ஒரு கேண்டி (356 கிலோ) 62 ஆயிரத்து 500 ரூபாயாக இருப்பதால், நூல் விலை உயர வாய்ப்பில்லை.இந்த நம்பிக்கையுடன் புதிய ஆர்டர்களை ஒப்பந்தம் செய்ய நூல் கொள்முதல் ஆர்டர் கொடுத்து வருகிறோம், என்றனர்.

பஞ்சு வரத்து குறைவால், அதிகரித்த நூல் விலை, பஞ்சை பதுக்கி வைத்தவர்களால் ஏற்பட்ட செயற்கை தட்டுப்பாடு, ஜிஎஸ்டி, பங்களாதேஷ் சென்ற ஆர்டர்கள் என, பல்வேறு பாதிப்புகளால், திருப்பூர் பனியன் துறை கடந்த ஓராண்டாக முடங்கி போயுள்ளது. தீபாவளிக்கு பிறகு, இதுவரை இன்னும் பல பனியன் நிறுவனங்கள், உற்பத்தியை துவங்கவில்லை. பெரிய ஏற்றுமதி தொழிற்சாலைகளிலும் மிக குறைந்த எண்ணிக்கையில், சில ஆயிரம் ஆடைகளே தயார் செய்யப்படுகின்றன. 300 பேர் வேலை செய்த இடத்தில், 100 தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்யும் நிலை நீடிக்கிறது. அதுவும், வாரத்தில் ஓரிரு தினங்கள் வேலை இல்லை என்ற நிலையே தொடர்கிறது.

இந்த சூழலில், பஞ்சு வரத்து அதிகரிப்பும், நூல் விலையில் மாற்றம் இல்லை என்ற நிலைப்பாடும் பனியன் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பாக அமையும் என்ற புதிய நம்பிக்கை, திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்களிடையே தற்போது ஏற்பட்டுள்ளது.

Updated On: 26 Jan 2023 9:52 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?