/* */

திருப்பூரில், முட்டைகோஸ் விலை சரிவால் தேக்கம்

Tirupur News, Tirupur News today- திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில், முட்டைகோஸ் வரத்து அதிகரித்ததால், விலை சரிந்தது. மூட்டை, மூட்டையாக முட்டைகோஸ் தேக்கமடைந்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூரில், முட்டைகோஸ் விலை சரிவால் தேக்கம்
X

Tirupur News, Tirupur News today- திருப்பூர், தென்னம்பாளையத்தில் தேங்கியுள்ள முட்டைகோஸ்.

Tirupur News, Tirupur News today -திருப்பூர் பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு முட்டை கோஸ் வரத்து அதிகரித்துள்ளது. இவை விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளன.

திருப்பூர் பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் தினசரி மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு காய்கறிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில வாரங்களாக முட்டைகோஸ் வரத்து அதிகமாக உள்ளது. பெரும்பாலும் தாளவாடி, மைசூர் ஆகிய இடங்களிலிருந்து இங்கு முட்டைகோஸ் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக 400 மூட்டைகள் இங்கு வரப்படும் நிலையில், தற்போது 700 மூடை முட்டைகோஸ் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

வரத்து அதிகரித்துள்ளதால் இதன் விலையும் அடியோடு சரிந்துள்ளது. 45 முதல் 50 கிலோ வரைக்கும் எடை கொண்ட ஒரு மூட்டை முட்டைகோசானது தற்போது ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் நன்கு தரமான மூட்டை மட்டும் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, முட்டைகோசிற்கு நல்ல விலை கிடைத்து வந்த நிலையில் தற்போது பெருமளவிற்கு விலை குறைந்திருப்பது வியாபாரிகளையும், விவசாயிகளையும் கவலையடைய செய்துள்ளது. இதன் விலை குறைந்திருந்தாலும் வியாபாரிகள் எதிர்பார்க்கும் அளவிற்கு விற்பனை நடக்காமல் உள்ளது. இதனால் மார்க்கெட்டில் முட்டை கோஸ் மூட்டை, மூட்டையாக தேக்கமடைந்துள்ளது.

சராசரியாக ஒரு முட்டை கோஸ் மூட்டையானது ரூ.400 முதல் ரூ.500 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதிகபட்சமாக ரூ.2ஆயிரத்தை தாண்டியும் ஒரு மூட்டை முட்டைகோஸ் விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் விலை எப்போது சீராகுமோ என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகளும், வியாபாரிகளும் காத்திருக்கின்றனர்.

கடைகளில் விலை குறையாது

காய்கறி மார்க்கெட்டில், முட்டைகோஸ் விற்பனையின்றி, இப்படி தேக்கமடைந்துள்ள நிலையிலும், மளிகை கடைகளில் முட்டைகோஸ் விலை ரூ. 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் ஏமாற்றமடைகின்றனர். மேலும், இவ்வாறு தேக்கமடைந்துள்ள முட்டைகோஸ்களை, குறைந்த விலையில் விவசாயிகளுக்கு, கால்நடை வளர்ப்போருக்கு தந்தால், கால்நடைகளுக்கு அவை உணவாக தரப்படும். மேலும், தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு முட்டை கோஸ்கள் குறைந்த பட்ச லாபத்தில் தரும் பட்சத்தில், ஓரளவு இதன் தேக்கத்தை குறைக்க முடியும் என, வியாபாரிகள் பலரும் தெரிவித்தனர்.

Updated On: 21 April 2023 6:08 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  2. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  3. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  5. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  7. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்