/* */

திருப்பூரில் அரசு பஸ்கள் 5 ‘ஜப்தி’

tirupur News, tirupur News today- திருப்பூரில், விபத்து நஷ்ட ஈடு வழங்காத வழக்குகளில் 5 அரசு பஸ்களை, கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் அரசு பஸ்கள் 5 ‘ஜப்தி’
X

tirupur News, tirupur News today- விபத்து இழப்பீடு வழங்காத வழக்குகளில், திருப்பூரில் அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. (கோப்பு படம்)

tirupur News, tirupur News today- கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி கொங்குநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 37). விவசாயி. இவர் கடந்த 26-8-2013 அன்று புதுப்பாளையம் அருகே சென்றபோது, அரசு பஸ் மோதிய விபத்தில் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். விபத்து நஷ்ட ஈடு கேட்டு விஸ்வநாதன் திருப்பூர் மோட்டார் வாகன விபத்து கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அவருக்கு கடந்த 18-9-2018 அன்று ரூ.4.75 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதுவரை நஷ்ட ஈடு வழங்காததால் நீதிபதி ஸ்ரீகுமார், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி அரசு பஸ்சை நேற்று கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் சென்னியப்பன் (32). திருப்பூரில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்தார். கடந்த 13-9-2017 அன்று மோட்டார் பைக்கில் ஊத்துக்குளி ரெட்டிப்பாளையம் அருகே சென்றபோது அரசு பஸ் மோதி இறந்தார். அவருடைய மனைவி நளினி மற்றும் குடும்பத்தினர் விபத்து நஷ்ட ஈடு கேட்டு திருப்பூர் மோட்டார் வாகன விபத்து கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். கடந்த 22-7-2021 அன்று, ரூ.22 லட்சத்து 82 ஆயிரத்து 600 வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதுவரை வழங்காததால், நீதிபதி உத்தரவின்பேரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

அவிநாசி ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தேவராஜ் (59). விவசாயி. கடந்த 11-12-2017 அன்று மோட்டார் பைக்கில் கருவலூர் அருகே சென்றபோது அரசு பஸ் மோதி இறந்தார். அவரின் மனைவி மகேஸ்வரி மற்றும் மகள், மகன் ஆகியோர் விபத்து நஷ்ட ஈடு கேட்டு மோட்டார் வாகன விபத்து கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். கடந்த 8-12-2021 அன்று ரூ.12 லட்சத்து 44 ஆயிரத்து 35 இழப்பீடாக வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதுவரை இழப்பீடு வழங்காததால் நீதிபதி உத்தரவின் பேரில் நேற்று கோர்ட் ஊழியர்கள் அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். மேற்கண்ட 3 வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் வக்கீல் பழனிசாமி ஆஜராகி வாதாடினார்.

பனியன் நிறுவன தொழிலாளி திருப்பூர் கொங்குநகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (47). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த 17-6-2014 அன்று மோட்டார் பைக்கில் ஊத்துக்குளி ரோடு முதல் ரயில்வேகேட் அருகே சென்றபோது அரசு பஸ்மோதி படுகாயமடைந்தார். சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். விபத்து நஷ்ட ஈடு கேட்டு மோட்டார் வாகன விபத்து கோர்ட்டில் அவர் வழக்கு தொடுத்தார். இவருக்கு கடந்த 18-1-2019 அன்று ரூ.19 லட்சத்து 33 ஆயிரம் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடாக வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதுவரை இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி நேற்று கோர்ட் ஊழியர்கள் அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

பல்லடத்தை சேர்ந்தவர் ராஜேஸ் (25). இவர் மோட்டார் பைக்கில் பல்லடம் அருகே சென்றபோது அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். விபத்து நஷ்ட ஈடு கேட்டு இவர், மோட்டார் வாகன விபத்து கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். கடந்த 2018-ம் ஆண்டு ரூ.23.5 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டும் வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து கோர்ட் ஊழியர்கள் நேற்று அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

Updated On: 31 March 2023 6:26 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி