/* */

தமிழக வாலிபரை தாக்கியதாக வெளியான வீடியோ பொய்யானது: போலீசார் விளக்கம்

தமிழக வாலிபரை, வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டது என போலீசார் விளக்கம்.

HIGHLIGHTS

தமிழக வாலிபரை தாக்கியதாக வெளியான வீடியோ பொய்யானது: போலீசார் விளக்கம்
X

பைல் படம்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள், தமிழக வாலிபர் ஒருவரை பெல்ட், கட்டை, உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும். தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் , தமிழக வாலிபரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தமிழக வாலிபரை, வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும், வீடியோவை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாகவும் திருப்பூர் மாநகர போலீசார் விளக்கம் அளித்தனர். மேலும் வீடியோவை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர் யாரென்று சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Jan 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  2. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  4. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  5. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  6. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  7. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  8. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!