/* */

விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு

விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாய சங்கம், ஏர்முனை இளைஞர் அணி ஆதரவு அளிக்கிறது.

HIGHLIGHTS

விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு
X

பைல் படம்.

இதுகுறித்து தமிழக விவசாய சங்கம் மாநில தலைவர் சண்முகம், மாநில துணை தலைவர் சுரேஷ் ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேளாண்மை தொழிலுக்கு மாற்றாக கோவை திருப்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ள பிரதான தொழில் விசைத்தறி ஆகும். நீண்ட காலமாக தங்கள் வாழ்வாதாரம் காக்கப்பட கூலி உயர்வு வேண்டி போராடி வருகிறார்கள். இருந்தபோதும் இதுவரை எந்த நியாயமான தீர்வும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 09.01.22 தேதி முதல் கூலி உயர்வு கிடைக்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள். கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் விசைத்தறியாளர்களின் நியாமான கோரிக்கையை நிறைவேற்றிட முதல்வர் நேரடியாக தலையிட்டு சுமூக தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும்.

நாளை (திங்கள்கிழமை) காலை 10 மணி அளவில் காரணம்பேட்டை நால்ரோட்டில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி ஆதரவு அளிக்கிறது. மேலும் விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை துணை நிற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.


Updated On: 23 Jan 2022 2:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  2. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  4. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  5. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  6. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  7. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  8. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  10. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...