திருப்பூரில், ரேஷன் கடையில் பொருட்கள் விற்பனையில் முறைகேடு; ஊழியர்கள் 3 பேர் ‘சஸ்பெண்ட்’

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் ரேஷன் கடையில், முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் 2 பெண் ஊழியர்கள் உள்பட 3 பேர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருப்பூரில், ரேஷன் கடையில் பொருட்கள் விற்பனையில் முறைகேடு;  ஊழியர்கள் 3 பேர் ‘சஸ்பெண்ட்’
X

Tirupur News. Tirupur News Today- விற்பனையில் முறைகேடு செய்ததாக, திருப்பூரில் ரேஷன் கடை ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் ரேஷன் கடையில் பொருட்கள் எடை குறைவாக விற்பனை உள்ளிட்ட புகார் தொடர்பாக, 2 பெண் ஊழியர்கள் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருப்பூர் தாராபுரம் ரோடு பொன்முத்துநகர் ரேஷன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடை விற்பனையாளர் இந்திராணி, பொதுமக்களுக்கு துவரம் பருப்பை எடை குறைவாக விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு வந்த ஒருவர் எடை குறைவாக பருப்பு உள்ளதாகவும், அந்த பருப்பை மீண்டும் எடை போடுமாறு விற்பனையாளரிடம் கூற, அவர் அடுத்த முறை சரி செய்து கொள்வதாக கூறுவதைப்போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சீனிவாசன் விசாரணை நடத்தினார். இந்நிலையில் கடை ஊழியர் இந்திராணியை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அதுபோல் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியதாக, அரண்மனைப்புதூர் ரேஷன் கடை ஊழியர் சிட்டி பாபு, கே.என்.பி.காலனி ரேஷன் கடை ஊழியர் பிரேமா ஆகியோரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் 3 ரேஷன் கடை ஊழியர்கள் மீது, கூட்டுறவுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில், சில கடைகளில் இதுபோன்ற நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும், அதிகாரிகள் நேரடியாக ஆய்வு நடத்தி, முறைகேட்டில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது, இதுபோன்ற கடும் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்றும், பொதுமக்கள் தரப்பில், கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 25 May 2023 12:31 PM GMT

Related News

Latest News

 1. தஞ்சாவூர்
  தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
 2. தமிழ்நாடு
  அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
 3. தஞ்சாவூர்
  தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
 4. தமிழ்நாடு
  விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
 5. உலகம்
  வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
 6. உலகம்
  27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
 7. இந்தியா
  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
 8. தமிழ்நாடு
  புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
 9. வந்தவாசி
  பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
 10. நாமக்கல்
  நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...