/* */

கோவில் நிலம் மீட்கக்கோரி திருப்பூரில் இந்து முன்னணியினர் போராட்டம்

கோவில் நிலத்தை மீட்கக்கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கோவில் நிலம் மீட்கக்கோரி திருப்பூரில் இந்து முன்னணியினர் போராட்டம்
X

கோவில் நிலத்தை மீட்கக்கோரி,  திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் முன்பு, இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம் செவந்தம்பாளையத்தில், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. கோவிலை சுற்றி, நந்தம் புறப்போக்கு நிலம் இருந்தது. இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தப்படுத்தி அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டது. தற்போது கோவில் புனரமைப்பு வேலை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஸ்வாமி சிலையை அருகில் உள்ள ஒரு இடத்தில் வைத்தபோது, நிலத்தில் இருந்து ஸ்வாமி சிலைகளை அகற்றுமாறு வருவாய் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர். கோவில் நிலம் இருந்து இருந்தால் சிலையை அங்கு வைத்து வழிபாடு செய்ய வசதியாக இருக்கும்; எனவே, கோவில் நிலத்தை மீட்டு தர வேண்டும் எனக்கோரி, திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் முன், சங்கு ஊதி நூதன போராட்டம் நடந்தது. போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Jan 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?