/* */

திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேர் திருவிழா

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேர் திருவிழா இன்று மாலை துவங்குகிறது. வரும் ஜூன் 2, 3ம் தேதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேர் திருவிழா
X

Tirupur News. Tirupur News Today- வரும் ஜூன் 2, 3ம் தேதிகளில் திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற உள்ளது. (கோப்பு படம்) 

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேர் திருவிழா இன்று தொடங்கி வருகிற 8-ம்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி இன்று 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6மணிக்கு கிராமசாந்தி அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

நாளை 27-ம் தேதி(சனிக்கிழமை) மாலை 6மணிக்கு கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நாளை முதல் 1-ம் தேதி வரை காலை 10 மணி மற்றும் மாலை 6-30மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. நாளை 27-ம்தேதி கற்பக விருட்ஷ வாகனம், சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 2-ம் நாளான 28-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பூத வாகனம், அன்ன வாகனத்திலும், 3-ம் நாளான 29-ம் தேதி(திங்கட்கிழமை) ராவணேஸ்வரர் வாகனம், காமதேனு, சேஷ வாகனத்திலும், 4-ம் நாளான 30-ம் தேதி(செவ்வாய்க்கிழமை) கற்பக விருட்சம், அதிகார வாகனம், யாழி வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 5-ம் நாளான 31-ம் தேதி(புதன்கிழமை) பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, கருட சேவை புறப்பாடு நடக்கிறது.

6-ம் நாளான ஜூன் 1-ம்தேதி(வியாழக்கிழமை) திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை வாகனம், அம்மன் பல்லக்கு சேவை, அனுமன் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் நாள் ஜூன் 2-ம்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3-30மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 5மணியில் இருந்து 6மணிக்குள் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல் நடக்கிறது. மதியம் 3-30மணிக்கு ஈஸ்வரன் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 8-ம்நாளான 3-ம் தேதி (சனிக்கிழமை) மதியம் 3-30மணிக்கு பெருமாள் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 9-ம் நாளான 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

10-ம்நாளான 5-ம் தேதி (திங்கட்கிழமை) தெப்பத்திருவிழா (பெருமாள் கோவில் ) நடக்கிறது. 11-ம்நாளான 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மகா தரிசனம் , 12-ம்நாளான 7-ம் தேதி (புதன்கிழமை) மஞ்சள் நீரரட்டு விழா, மலர் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 13-ம் நாளான 8-ம் தேதி (வியாழக்கிழமை) விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 4-ம் தேதி முதல் 7-ம்தேதி வரை காலை 10மணி, மாலை 7மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

விழாவையொட்டி நாளை 27-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தினமும் மாலை 6மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன்படி நாளை 27-ம் தேதி மாலை 6மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி நடக்கிறது. 28-ம் தேதி ஜெயந்தி ஸ்ரீதரின் தெய்வீக பாடல் நிகழ்ச்சி,29-ம் தேதி திருப்பூர் கம்பன் கழகம் சார்பில் சிறப்பு பட்டிமன்றம், 30-ம் தேதி சவிதா ஸ்ரீராமின் நாம சங்கீர்த்தனம், 31-ம் தேதி நவீன் பிரபஞ்ச நடன குழுவின் கொங்கு நாட்டு பாரம்பரிய ஒயில் கும்மி நடனம் நிகழ்ச்சி, ஜூன் 1-ம் தேதி பரத நாட்டிய நிகழ்ச்சி, 2-ம் தேதி பரத நாட்டிய நிகழ்ச்சி, 3-ம் தேதி நரசிம்மர் தரண்டகம் என்ற தலைப்பில் நாட்டிய நாடகம், 4-ம் தேதி வீரமணி ராஜூ, அபிஷேக் ராஜூ குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி, 5-ம் தேதி மணிகண்டனின் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ,6-ம் தேதி தெய்வீக பாடல்கள் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

Updated On: 26 May 2023 10:01 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  2. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  3. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  4. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  5. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  6. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  7. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  8. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  9. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  10. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...