/* */

பற்கள் பற்றி இழிவாக பேசியதால், போதை நண்பனின் 5 பற்களை அடித்து ‘கழட்டிய’ நபரால் பரபரப்பு

Tirupur News- திருப்பூரில், மதுபோதையில் இருந்த போது பற்கள் இல்லாதது பற்றி இழிவாக பேசியதால், ஆத்திரமடைந்த நபர், நண்பரின் ஐந்து பற்களை அடித்து உடைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

பற்கள் பற்றி இழிவாக பேசியதால், போதை நண்பனின் 5 பற்களை அடித்து ‘கழட்டிய’ நபரால் பரபரப்பு
X

Tirupur News- திருப்பூரில் நண்பரின் பற்களை ‘பெயர்த்த’ நபரால் பரபரப்பு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் குமார்நகரை அடுத்த வளையங்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 36). தையல் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (45). நண்பர்களான இருவரும் நேற்று மதியம், திருப்பூர் காந்திநகர் அருகே மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கு ஏறிய நிலையில் இரவு இருவரும் ‘டாஸ்மாக்’ பாரை விட்டு வெளியே வந்துள்ளனர்.

அப்போது பாண்டியன் காளிமுத்துவை பார்த்து "பல் இல்லாத உனக்கு எதற்கு பொண்டாட்டி" என கேவலமாக கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த காளிமுத்து அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து, ‘உனக்கு பல் இருப்பதால் தானே இப்படி பேசுகிறாய் உன் பல் அனைத்தையும் உடைத்து விடுகிறேன்,’ என்று கூறிக்கொண்டு, பாண்டியன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.

பாண்டியன் கீழே தரையில் தடுமாறி விழுந்த நிலையில், காளிமுத்து உருட்டுக்கட்டையால் தொடர்ந்து பாண்டியன் முகத்தில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த பாண்டியனின் 5 பற்கள் உடைந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காளிமுத்துவை தடுத்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாண்டியனை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காளிமுத்துவை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒருவர் மீது கோபம் வந்தால், ‘அடித்து பல்லை கழட்டி விடுவன்’ என, பொய்யாக சிலர் மிரட்டுவர். ஆனால் உண்மையிலேயே நண்பரின் பற்களை, உருட்டுக்கட்டையால் அடித்து உடைத்து நொறுக்கிய வீடியோ காட்சிகளை பலரும் பார்த்து, வைரலாக்கி வருகின்றனர்..

Updated On: 21 Sep 2023 8:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  3. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  4. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  8. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  9. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  10. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்