/* */

கால்நடை மருத்துவமனை செயல்படும் நேரத்தில் மாற்றம் கூடாது; விவசாயிகள் வலியுறுத்தல்

தமிழகத்தில் கால்நடை மருத்துவமனை செயல்படும் நேரத்தில் மாற்றம் கூடாது என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கால்நடை மருத்துவமனை செயல்படும் நேரத்தில் மாற்றம் கூடாது; விவசாயிகள் வலியுறுத்தல்
X

கால்நடை மருத்துவமனை செயல்படும் நேரத்தில் மாற்றம் கூடாது என, விவசாயிகள் வலியுறுத்தல்.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படுகின்றன. இவை, செயல்படும் நேரத்தை, வேலை நாட்களில் காலை 8 மணிமுதல், மதியம் 2 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல், மதியம் 12 மணி வரையும் செயல்படும் வகையில், நேரத்தை மாற்றி அமைக்க ஆலோசனை நடக்கிறது. அதற்காக உடுமலை கால்நடைபராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன், துணைச்செயலாளர் பரமசிவம் ஆகியோர் கொடுத்த மனு:

விவசாயத்தொழிலாளர்களும், விவசாய பணிகளுக்கு காலை 7 மணிக்கு சென்று விட்டு, மதியம் 2 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். அதன் பின்பு தங்களது கால்நடைகளை பராமரிக்கும் பணிகளை செய்வார்கள். இந்நிலையில், கால்நடை மருத்துவமனை செயல்படும் நேரத்தை மாற்றுவது எந்தவித பயனும் இல்லாமல் போய்விடும். மாலை 3 மணிமுதல் 5 மணிவரை யாராவது ஓரிருவர் சென்றாலும், மற்றவர்கள் மருத்துவமனையில் இருப்பது முதலுதவி செய்ய பயன்படும். மதியம் 2 மணியுடன் செயல்படும் நேரம் முடிவடைவதால் மறுநாள் காலை 8 மணிவரை, இடைவெளியில் எந்தவித கால்நடை மருத்துவ தேவையும் கிடைக்காது. எனவே, தற்போது கால்நடை மருத்துவமனைகளின் செயல்படும் நேரத்தை மாற்றக்கூடாது. மேலும் அவசரத்தேவைகளுக்காக போன் எண் 1968 அழைத்தால், வரும் நடமாடும் மருத்துவ வாகனங்கள், போதுமான அளவில் இல்லை. அதை அதிகப்படுத்த வேண்டும் என, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 9 Sep 2022 9:41 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...