/* */

கிலோவுக்கு ரூ.25 குறைந்த நூல் விலை; திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.25 குறைந்ததால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கிலோவுக்கு ரூ.25 குறைந்த நூல் விலை; திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.25 குறைந்தது (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.25 குறைந்ததால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பனியன் உற்பத்தி வேகமாக தொடங்கி, வரும் நாட்களில் மந்த நிலை மாறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. திருப்பூரில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வந்தனர். நூல் விலையை பொறுத்தே ஆர்டர்களை ஒப்பந்தம் செய்து மொத்தமாக நூல் வாங்கி பின்னலாடை உற்பத்தி செய்கின்றனர். நூல் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக பனியன் தொழில் மந்தநிலையை சந்தித்து வந்தது. அபரிமிதமான நூல் விலையேற்றத்தால் பனியன் தொழில் கடந்த ஒரு ஆண்டாக முடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. அதன்பிறகு கடந்த 5 மாதங்களாக நூல் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. இதன் காரணமாக பின்னலாடை ஆர்டர்கள் மெல்ல மெல்ல வரத்தொடங்கியது.

குறிப்பாக ஏற்றுமதி நிறுவனங்களுக்கான ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளது. இதனால் ஏற்றுமதி நிறுவனங்களில் பனியன் உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கான ஆர்டர் வருகை போதுமானதாக இல்லை. இதன் காரணமாக ஜாப்ஒர்க் நிறுவனங்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில், இந்த மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் நேற்று அறிவித்தன. அதன்படி 30-ம் நம்பர் நூல் வரை கடந்த மாதத்தை விட கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளது. 34-ம் நம்பர், 40-ம் நம்பர் நூல் விலை கிலோவுக்கு ரூ.25 வரை குறைந்துள்ளது.

நூல் விலை விவரம்

அதன்படி கோம்டு ரகம் ஒரு கிலோ 10-ம் நம்பர் ரூ.165-க்கும், 16-ம் நம்பர் ரூ.175-க்கும், 20-ம் நம்பர் ரூ.233-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.255-க்கும், 34-ம் நம்பர் ரூ.270-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும் விற்பனை செய்யப்பட்டது. செமி கோம்டு ரகத்தில் 20-ம் நம்பர் ரூ.225-க்கும், 24-நம் நம்பர் ரூ.245-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ.260-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனையானது.

நூல் விலை குறைந்துள்ளதால், ஆர்டர்களை தைரியமாக எடுத்துச்செய்ய முடியும் என்று உள்நாட்டு, வெளிநாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மந்தநிலையை போக்கி, மீண்டும் பனியன் உற்பத்தி எழுச்சி பெறும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

Updated On: 2 July 2023 7:39 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?