/* */

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Water Distribution- பல்லடத்தில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

Water Distribution | Block Road
X

பல்லடத்தில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Water Distribution- பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் பனிக்கம்பட்டி ஊராட்சி உள்ளது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய், குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

குடிநீர் வசதி கேட்டு, இப்பகுதி குடியிருப்புவாசிகள் நேற்று பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில், சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த பல்லடம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதற்கிடையே பல்லடம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளும் அங்கு வந்தனர். அப்பகுதிக்கு ஜல் சக்தி அபியான் திட்டத்தில், குடிநீர் வழங்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை யடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர் இதனால் பல்லடம் செட்டிபாளையம் ரோட்டில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Aug 2022 4:27 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...