'டாஸ்மாக்' மதுக்கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே புதிதாக 'டாஸ்மாக்' மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
X

உடுமலை அருகே, ‘டாஸ்மாக்’ மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

உடுமலையை அடுத்த மைவாடி ஊராட்சிக்கு உட்பட்ட கே.கே.புதூர் அருகில் புதிதாக 'டாஸ்மாக்' மதுக்கடை திறக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, நேற்று அந்த பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் திடீரென்று கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மைவாடி பிரிவு பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பயணிகள் அவதிப்பட்டனர். அப்பகுதியில், வாகன நெரிசலும், மக்கள் கூட்டம் அதிகரித்ததால், பரபரப்பு நீடித்தது.

இதனையடுத்து உடுமலை தாசில்தார் கண்ணாமணி, மடத்துக்குளம் தாசில்தார் செல்வி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 'டாஸ்மாக்' மதுக்கடை திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர். எனவே போராட்டத்தைக் கைவிட்டு, செல்லுமாறு அதிகாரிகள் தரப்பில் கேட்டுக் கொண்டதை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

தற்போது 'டாஸ்மாக்' கடை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் நீரோடை, பொது மயானம், விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளது.மேலும் எங்கள் ஊருக்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படும் நிலையில், பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலையில் மைவாடி பிரிவு பகுதியில் இறங்கி ஊருக்கு நடந்து வரும் நிலை உள்ளது. பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவ்வாறு நடந்து தான் வந்து கொண்டுள்ளனர். தற்போது மதுக்கடை திறக்கப்பட உள்ள இடத்தைத் தாண்டித் தான் ஊருக்கு வர வேண்டும்.மதுக்கடை திறக்கப்பட்டால் அங்கு பல பகுதிகளிலிருந்து வரும் குடிமகன்கள் குவிந்து விடுவார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்படும். மேலும் அந்த பகுதியிலுள்ள விளை நிலங்களில் 'குடி'மகன்கள் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களையும் கவர்களையும் வீசிச்செல்வார்கள். இதனால் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த பகுதிக்கு அருகில் பல நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்படுகிறது. அங்கு நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.அவர்களும் இங்கு குடிக்கத் தொடங்கினால் தொழில் பாதிப்படையும்.பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். குடிப் பழக்கத்தால் பல குடும்பங்கள் சிதைந்து சின்னாபின்னாமாகிறது. அந்த நிலை எங்கள் பகுதியிலுள்ள குடும்பங்களுக்கு வருவதற்கு விட மாட்டோம்.இந்த இடத்தில் 'டாஸ்மாக்' மதுக்கடை திறக்கக் கூடாது என்று பல முறை மனு கொடுத்தும், திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது தாசில்தார் கொடுத்த உறுதிமொழியையும் தாண்டி இங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் அடித்து நொறுக்குவோம்.

இவ்வாறு பொதுமக்கள் ஆவேசமாகக் கூறினர்.

Updated On: 2022-11-24T20:10:13+05:30

Related News

Latest News

 1. தேனி
  தேனியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.. நிரந்தர தீர்வுக்கு செய்ய...
 2. தேனி
  தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் நிறைவு..
 3. மதுரை மாநகர்
  இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு...
 4. விராலிமலை
  கீரனூரில் இருந்து புலியூருக்கு பேருந்து வசதி: ஜனநாயக மாதர் சங்கம்...
 5. துறைமுகம்
  கடற்படை தினத்தையொட்டி போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
 6. சென்னை
  திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு.. ஆதிதிராவிடர் மாநில ஆணையம்...
 7. புதுக்கோட்டை
  வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்புப்...
 8. சென்னை
  தகுதி இல்லாதவர்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கீடு.. அதிகாரிகள் மீது...
 9. சிவகாசி
  விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
 10. இந்தியா
  விழிஞ்சம் துறைமுகத்தில் மத்தியப் படை பாதுகாப்பு கோரி அதானி குழுமம்...