மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவன்: மடக்கி பிடித்த பொதுமக்கள்

மடத்துக்குளம் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவன்: மடக்கி பிடித்த பொதுமக்கள்
X

பைல் படம்.

மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் மதகடி புதூரை சேர்ந்தவர் கிட்டுசாமி, விவசாயி. இவரது மனைவி மயிலாத்தாள்,56. இவர், குமரலிங்கம் குள்ளக்கார் ஓடைக்கு அருகில் உள்ள தோட்டத்தில் தென்னை ஓலைகளை சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4பேர், மயிலாத்தாள் அணிந்திருந்த நகைகளை கழற்றி தருமாறு மிரட்டினர். அப்போது மயிலாத்தாள் காப்பாற்றுமாறு சத்தம் போட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும், மயிலாத்தாள் கையில் வைத்து இருந்த கத்தியை பிடிங்கி, கை மற்றும் தோள் பட்டையில் குத்தினர். அதற்குள் சத்தம் கேட்டு, அருகில் இருந்த பொது மக்கள் ஓடி வந்தனர். இதை கண்ட நான்கு பேரும், தப்பி ஓடினர். இதில், 17, வயது சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மற்ற 3, பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிப்பட்ட சிறுவனை குமரமங்கலம் போலீஸார் கைது செய்தனர். மயிலாத்தாள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தப்பி ஓடிய 3, பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On: 18 Aug 2021 12:55 PM GMT

Related News

Latest News

 1. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள் வெளியீடு
 2. எடப்பாடி
  சேலம் மாவட்டத்தில் 88.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக எடப்பாடியில் 29...
 3. பவானிசாகர்
  சத்தியமங்கலம் நகராட்சியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்த இலக்கு
 4. அந்தியூர்
  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அதிகபட்சமாக 14.6 மி.மீ மழை
 5. ஆண்டிப்பட்டி
  இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
 6. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 7. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 8. பவானிசாகர்
  பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400...
 9. தமிழ்நாடு
  1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை இருவர் கைது
 10. அந்தியூர்
  பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து