/* */

லாரி டிரைவரை மிரட்டி ரூ.17 ஆயிரம் பறிப்பு

முத்தூர் அருகே, லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.17 ஆயிரத்தை, நான்கு பேர் பறித்து சென்றனர்.

HIGHLIGHTS

லாரி டிரைவரை மிரட்டி ரூ.17 ஆயிரம் பறிப்பு
X

கத்தியை காட்டி மிரட்டி, லாரி டிரைவரிடம் ரூ. 17 ஆயிரம் பறிப்பு.

நாமக்கல் மாவட்டம் தத்தாதிரிபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கவுதம் (வயது 32). லாரி டிரைவர். இவர் பல்லடம் - உடுமலை ரோட்டில் உள்ள தனியார் கோழி தீவன உற்பத்தி நிறுவனத்தில் இருந்து, லாரியில் கோழி தீவனத்தை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்தார். இவர் ஓட்டி வந்த லாரி முத்தூர் - காங்கயம் ரோடு செட்டியார்பாளையம் பகுதியில் நள்ளிரவு 11.45 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது ரோட்டோரத்தில் நின்ற இரண்டு பேர் லிப்ட் கேட்பது போல், குறுக்கே கை காட்டினார்கள். இதனால் லாரி டிரைவர் கவுதம் லாரியை நிறுத்தினார். அப்போது கைகாட்டிய இரண்டு பேருடன், இருட்டில் மறைந்திருந்த மேலும் இரண்டு பேர் என மொத்தம் நான்கு பேர் லாரியின் கேபினில் ஏறி உள்ளே சென்றனர். பின்னர் லாரி டிரைவர் கவுதமிடம் அந்த நபர்கள், திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பணத்தை கொடுக்குமாறு மிரட்டினர். பின்னர் லாரி டிரைவர் கவுதம் வைத்திருந்த ரூ.17 ஆயிரத்து 500-ஐ பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து, லாரி டிரைவர் கவுதம் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Updated On: 15 Sep 2022 5:48 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...