/* */

காங்கேயத்தில் கொரோனா நோய்தடுப்பு உதவி மையம்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கொரோனா நோய் தடுப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

காங்கேயத்தில் கொரோனா நோய்தடுப்பு உதவி மையம்
X

திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் இருந்த கொரொனா தொற்றுப் பரவல், ஊரடங்கிற்கு பிறகு படிப்படியாக குறையத் தொடங்கி இருக்கிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளே முக்கிய காரணமாகும்.
கொரோனா தொற்று பரவல் தற்போது படிப்படியாக குறையத் தொடங்கினாலும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட் நிர்வாகம் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. அவ்வகையில், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு 24, மணி நேர உதவி மையம் அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

பொதுமக்கள் தங்களின் தேவைக்கு, காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக எண்- 04257230635, கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் எண்களாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன்- 7402905360, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்முரளி - 9443342012, சுகாதார ஆய்வாளர்கள் ரகுபதி - 9442904013, தேவராஜ் - 9508249595, மணி- 9865006748, ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 7 Jun 2021 7:30 AM GMT

Related News