/* */

திருப்பூரில் தேசிய ஆடை கண்காட்சி; வரும் 19 ம் தேதி துவக்கம்

Tirupur Dress Market - திருப்பூரில் தேசிய ஆடை கண்காட்சி வரும், 19ம் தேதி துவங்கி, 21 ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு நடக்கிறது.

HIGHLIGHTS

திருப்பூரில் தேசிய ஆடை கண்காட்சி; வரும் 19 ம் தேதி துவக்கம்
X

திருப்பூரில் மூன்று நாள்  தேசிய ஆடை கண்காட்சி வரும், 19ம் தேதி துவங்குகிறது.

Tirupur Dress Market -திருப்பூரில், ஏ.இ.பி.சி., என்ற ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் அங்கமான, இந்தியா நிட்பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில், முதன் முறையாக வரும், 19ம் தேதி முதல், 21 வரை தேசிய ஆடை கண்காட்சி நடக்கிறது. நவீன காலத்துக்கு ஏற்ற ஆடைகள், ஆண், பெண், குழந்தைகளுக்கான ஆடைகள் என அனைத்து வகைகளும் அரங்குகளில் இடம்பெறுகிறது.


உள்நாடு மற்றும் ஏற்றுமதி ஆடை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்கள், வர்த்தகர்களை இணைக்கும் வகையில் இது அமையும். தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் இருந்தும் வர்த்தகர்கள் பங்கேற்பர். கண்காட்சியில் பங்கேற்கும் உறுப்பினர் அல்லாத நிறுவனங்களுக்கு, 50 சதவீதம் சிறப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் காட்சி அரங்குகள் அமைக்கப்படுகிறது. இதுவரை, 60 பேர் அரங்குக்கு முன்பதிவு செய்துள்ளனர். மொத்தம், 90 அரங்குகள் இடம்பெறும் வாய்ப்புள்ளது. கண்காட்சி, திருப்பூர் பின்னலாடை துறைக்கு அவசியமானதாக உள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு ஏற்றுமதி வர்த்தகம், 15 முதல், 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

நடப்பு நிதியாண்டு முடிவில், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம், 36 ஆயிரம் கோடி, உள்நாட்டு வர்த்தகம், 20 ஆயிரம் கோடி ரூபாய் என, 56 ஆயிரம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு சக்திவேல் கூறினார்.

ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சிலிங் செயற்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியம், ராமு, இணை இயக்குனர் சுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 19 Aug 2022 4:23 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா