/* */

இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வர அறிவுறுத்தல்

இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளி வருவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு உதவ வேண்டும் என, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வர அறிவுறுத்தல்
X

திருப்பூரில் நடந்த பள்ளி மேலாண்மை கூட்டத்தில், ‘உயர்கல்வியை தொடராத மாணவ, மாணவியருக்கு உதவ வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. (கோப்பு படம்) 

திருப்பூர் மாவட்டத்தில், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமையன்று, பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூரில் நடந்த இக்கூட்டத்தில் பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியபடி பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் செயலியில் (TNSED Parent App) வருகை பதிவு, பள்ளிகளில் திட்டமிடுதல் சார்ந்த விவரங்களை பதிவேற்றினர். இதன்மூலமே பள்ளி வளர்ச்சிக்கு விவாதிக்கப்பட்ட பொருள், தீர்மானங்கள் பெற்றோர்களுக்கு பகிர்ந்து தெரிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத்தில், பெற்றோர்களிடம் காலாண்டு தேர்வு தேர்ச்சி விவரங்களை பகிர்ந்து, கற்றல் அடைவு சார்ந்த கலந்தாலோசனை நடைபெற்றது. கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தவும் இதில் ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளி வருவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு உதவ வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பள்ளியின் சார்பில், தலைமை ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து, அதற்கான தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதனிடையே பிளஸ் 2 முடித்து, இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்களில் உயர்கல்வி முகாமில் பங்கேற்ற 47 பேர் உயர்கல்வி சேர முன்வந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில், பிளஸ் 2 முடித்தவர்கள் உயர்கல்வி சேர்ந்துள்ளார்களா, என்று பள்ளி கல்வித்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில், திருப்பூரில் பிளஸ் 2 முடித்த மாணவர்களில் 150 பேர் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமை கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயர் கல்வியை தொடரவில்லை. இவர்கள் உயர் கல்வியை தொடர, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டி முகாம் கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது.

இதில் பங்கேற்ற மாணவர்களில், 47 பேர் உயர்கல்வி சேர்வதற்கான வாய்ப்புகளை கேட்டறிந்தனர். இதில் 8 பேர் ஐ.டி.ஐ., தொழிற்கல்வியில் சேரவும், 3 பேர் கலை அறிவியல் கல்லூரியில் சேர்க்கை நீட்டிப்பு செய்தால், விண்ணப்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். பலர் நீட், வேளாண் படிப்பு கலந்தாய்வு முடிவுக்கு காத்திருப்பதாகவும், நிச்சயம் உயர்கல்வி தொடர்வதாக உறுதியளித்தனர். இவ்வாறு மொத்தம் 47 பேர் உயர்கல்வி தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர். தேர்ச்சியடையாத மாணவர்கள் பலர் பியூட்டிஷியன், டெய்லரிங், கம்ப்யூட்டர் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். 2 கல்விக்கடன் பெறுவதற்கான வழிமுறைகளை கேட்டறிந்தனர். கல்லூரியில் சேர்வதை கண்காணிக்கும் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி முகாமில் பங்கேற்க தவறியவர்கள், வெள்ளிக்கிழமை நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 Oct 2022 8:36 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  2. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  4. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  5. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  10. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?