ரூ. 38. 83 கோடியில் புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் திறப்பு

திருப்பூரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டப்பட்ட பொலிவுபடுத்தப்பட்ட கலைஞர் பஸ் ஸ்டாண்ட், அடுக்குமாடி வாகன நிறுத்தம், வாரச்சந்தை, பூ மார்க்கெட் என ரூ.75.50 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை காணொலிக்காட்சி மூலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ரூ. 38. 83 கோடியில் புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் திறப்பு
X

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் புதுப்பித்து கட்டப்பட்ட திருப்பூர் பஸ் ஸ்டாண்ட், மின்னொளியில் காட்சியளிக்கிறது.

திருப்பூர் மாநகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.38 கோடியே 83 லட்சம் மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்ட பழைய பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.19 கோடியே 7 லட்சம் மதிப்பில் பல அடுக்குமாடி வாகன நிறுத்தம் (பார்க்கிங்), தென்னம்பாளையத்தில் ரூ.12 கோடியே 86 லட்சம் மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்ட வாரச்சந்தை, பெருமாள் கோவில் அருகே ரூ.4 கோடியே 69 லட்சம் மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்ட பூ மார்க்கெட் என மொத்தம் ரூ.75 கோடியே 43 லட்சம் மதிப்பிலான கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம், மதியம் 12 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக இணைந்தனர். மேயர் தினேஷ்குமார், தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் உதயசூரியன் எம்.எல்.ஏ., கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி பொறியாளர் முகமது சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வருக்கு, கலெக்டர் வினீத் நன்றி கூறினார்

விழாவில் சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், தென்னிந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல், 'நிட்மா' சங்க தலைவர் அகில் ரத்தினசாமி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் உமாமகேஸ்வரி, கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், செந்தில்குமார், ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜ் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

கலைஞர் பஸ் ஸ்டாண்ட்

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு 'கலைஞர் பஸ் ஸ்டாண்ட்' என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. 84 கடைகள், 2 உணவகங்கள், ஒரு உணவு விற்பனையகம், 2 ஏ.டி.எம். அறை, 2 தாய்மார்கள் பாலூட்டும் அறை, 50 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நகரும் படிக்கட்டுகளுடன் நடைவழி மேம்பாலம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திறப்பு விழாவை பொதுமக்கள் காணும் வகையில் பஸ் ஸ்டாண்ட் முன் பிரமாண்ட திரை வைக்கப்பட்டு திறப்பு விழா காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டதும் டவுன் பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்து இயக்கப்பட்டன.

காங்கயம், கொடுவாய், அவிநாசி, பல்லடம், குன்னத்தூர் செல்லும் டவுன் பஸ்கள், சென்னை, மைசூரு, கோவை பஸ்கள் நிற்கும் ரேக்குகளில் பஸ்கள் நிறுத்தி வைத்து இயக்கப்பட்டன. கடைகள் திறக்கப்படவில்லை. பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்து இயக்கப்பட்ட பஸ்களில் மகிழ்ச்சியுடன் பயணிகள் ஏறி சென்றனர். கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் ஸ்டாண்டை சுற்றிப்பார்த்தனர்.

'பார்க்கிங்' கட்டிடம்

பல அடுக்குமாடி வாகன நிறுத்தம் பல அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் 2 ஆயிரத்து 50 இருசக்கர வாகனங்களையும், 14 நான்கு சக்கர வாகனங்களையும், 20 மாற்றுத்திறனாளி வாகனங்களையும் நிறுத்த முடியும். 20 கிலோ வாட் திறன் கொண்ட சூரியமின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. 2 மின் தூக்கிகள் இடம் பெற்றுள்ளன. ஆண்கள், பெண்களுக்கு 10 கழிப்பிடங்கள் உள்ளன.

தென்னம்பாளையம் வாரசந்தை

மொத்தம் 33 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. இங்கு 122 சில்லரை விற்பனை கடைகள், 2 உணவகம், 18 வெங்காய விற்பனை கடைகள் அமைந்துள்ளன. ஆண்கள், பெண்களுக்கு 14 கழிப்பிடங்கள் உள்ளன.

பூமார்க்கெட்

வீரராகவப் பெருமாள் கோவில் அருகே கட்டப்பட்டுள்ள பூ மார்க்கெட்டில் 86 கடைகள் அமைந்துள்ளன. இங்கு 50 இருசக்கர வாகனங்கள், 17 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள் கழிப்பிடமும் அமைந்துள்ளன.

Updated On: 24 Nov 2022 2:59 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  தேனியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.. நிரந்தர தீர்வுக்கு செய்ய...
 2. தேனி
  தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் நிறைவு..
 3. மதுரை மாநகர்
  இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு...
 4. விராலிமலை
  கீரனூரில் இருந்து புலியூருக்கு பேருந்து வசதி: ஜனநாயக மாதர் சங்கம்...
 5. துறைமுகம்
  கடற்படை தினத்தையொட்டி போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
 6. சென்னை
  திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு.. ஆதிதிராவிடர் மாநில ஆணையம்...
 7. புதுக்கோட்டை
  வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்புப்...
 8. சென்னை
  தகுதி இல்லாதவர்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கீடு.. அதிகாரிகள் மீது...
 9. சிவகாசி
  விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
 10. இந்தியா
  விழிஞ்சம் துறைமுகத்தில் மத்தியப் படை பாதுகாப்பு கோரி அதானி குழுமம்...