திருப்பூரில் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி துவங்கப்படும்; அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் மிக விரைவில் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி துவங்கப்படும் என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருப்பூரில் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி துவங்கப்படும்; அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கூடுதல் வசதிகள் மருத்துவசேவை துவக்க விழா நடந்தது. இதில், அறுவை சிகிச்சை செய்ய தேர்வானவர்களுக்கு மருத்துவ ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினா்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் 500 படுக்கைகளுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கூடுதல் வசதிகள் மருத்துவ சேவையை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன் ஆகியோர் துவங்கி வைத்தனர். திருப்பூரில் மிக விரைவில் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.127 கோடியில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் 500 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் கூடுதல் வசதிகள் மருத்துவ சேவை துவக்க விழா நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குனர் சாந்திமலர் வரவேற்றார்.

புதிய கட்டிடத்தில் மருத்துவ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,

தமிழகத்தில் 11 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கல்லூரிகளில் மருத்துவ சேவை தொடங்கப்படாமல் இருந்தது. அதற்கான கட்டுமான பணிகளை தமிழக அரசின் சார்பில் கூடுதல் நிதியை ஒதுக்கி பணிகளை நிறைவுபடுத்தியதால் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் மருத்துவ சேவைகள் தொடங்கி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நாமக்கல், ஊட்டி, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் மருத்துவ சேவைகள் தொடங்கப்பட உள்ளது. 2, 3 மாதங்களில் அந்த பகுதிகளில் 500 மற்றும் 600 படுக்கைகளுடன் மருத்துவ சேவைகள் தொடங்கப்பட இருக்கிறது. இந்த மருத்துவமனை 500 படுக்கைகளுடன் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மொத்தம் இங்கு 1,170 படுக்கைகள் இந்த மருத்துவமனைகளில் உள்ளது. நாளொன்றுக்கு புறநோயாளிகளின் எண்ணிக்கை 2,700 பேர், உள்நோயாளிகளாக 700 பேர் வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.98 கோடியே 88 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனைகளில் மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க வேண்டும் என்று அரசிடம் அமைச்சர், எம்.எல்.ஏ. ஆகியோர் கோரிக்கை வைத்தனர். ஆண்டுக்கு 100 பேர் பயிற்சி முடிக்கும் வகையில் ஏற்படுத்த கூறினா். இதுதொடர்பாக மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். 30 செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க கோரினோம். 11 இடங்களில் புதிதாக செவிலியர் பயிற்சி கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் அமைய உள்ளது. திருப்பூரில் 100 மாணவியர் சேர்க்கையுடன் செவிலியர் பயிற்சி கல்லூரி மிக விரைவில் அமைய உள்ளது. அந்த கல்லூரிக்கு ரூ.10 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் டெல்லியில் இருப்பதைப்போல் 708 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டத்துக்கு மட்டும் 39 நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்க அறிவிக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியில் 34 மையங்களும், உடுமலை, பல்லடம், அவிநாசி, திருமுருகன்பூண்டி நகராட்சிகளில் தலா ஒரு மையம் அமைக்கப்படுகிறது. இன்னும் 15 நாட்களில் முதலமைச்சர், தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையத்தை ஒரேநாளில் திறந்து வைக்க உள்ளார். ஒவ்வொரு மருத்துவ மையத்துக்கும் தலா 4 பணியாளர்கள் நியமனம் அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலமாக நடக்கிறது. படியூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அதுபோல் குளத்துப்பாளையம் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, 'கொரோனா பேரிடர் காலத்தில் இருந்து மீண்டு வருவதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை என்பது பாராட்டுக்குரியது. வருமுன்காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 திட்டங்கள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை எளிதில் கிடைத்து வருகிறது. திருப்பூரில் பொதுமக்கள் பங்களிப்புடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க நிதி உதவி அளித்து வருகின்றனர். விரைவில் அரசின் பங்களிப்பு நிதியுடன் ரூ.30 கோடியில் நவீன கருவிகள் வாங்கப்பட உள்ளது' என்றார்.

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினா். முடிவில் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் நன்றி கூறினார்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. சு.துரைசாமி, சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், துணை மேயர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், உமாமகேஸ்வரி, கோவிந்தராஜ், மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா, பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) தலைமை பொறியாளர் இளஞ்செழியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 May 2023 2:27 AM GMT

Related News

Latest News

 1. ஈரோடு மாநகரம்
  அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
 3. மணப்பாறை
  திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
 4. காஞ்சிபுரம்
  மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
 5. பெருந்துறை
  மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
 6. ஈரோடு மாநகரம்
  ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
 7. ஈரோடு மாநகரம்
  ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
 8. கோவில்பட்டி
  காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
 9. கோவில்பட்டி
  தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
 10. வாசுதேவநல்லூர்
  தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா