/* */

அமராவதி அணையில், ஜூன் 1 முதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

Tirupur News,Tirupur News Today- வரும் ஜூன் 1ம் தேதி முதல், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அமராவதி அணையில், ஜூன் 1 முதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
X

Tirupur News,Tirupur News Today- அமராவதி அணை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு வரும் ஜூன் 1 முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது,

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1 முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டதும் நீர் திறக்கப்படும் என்றனர். அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. பாசன பகுதிகளிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கரும்பு அறுவடை முடிந்ததும் கட்டை கரும்பு மற்றும் நடவு மேற்கொள்ள அமராவதி அணையில் இருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜூனில் தென்மேற்கு பருவ மழை துவக்கியதும் அணை நீர் இருப்பை பொருத்து நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 29 May 2023 7:40 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்