/* */

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Tirupur News Today - வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்.

Tirupur News Today - வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டு நிறைவு பெற்றுள்ள மனுதாரர்களுக்கும், மாற்றுத்திறனாளி பிரிவில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ள இளைஞர்களுக்கும் கீழ்க்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மாதாந்திரஉதவித் தொகை (பொது)

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்- 200

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்- 300

பனிரெண்டாம் வகுப்பு /அதற்கு சமமான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றவர்கள்- 400

பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள் - 600

மாதாந்திரஉதவித் தொகை- (மாற்றுத்திறனாளி)

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்- 600

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்- 600

பனிரெண்டாம் வகுப்பு /அதற்கு சமமான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றவர்கள்- 750

பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள்-1000

வயது வரப்பு (உதவித் தொகை பெறும் நாளில்)

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் - 45 வயதிற்குள்

இதரவகுப்பினர் − 40 வயதிற்குள்

மாற்றுத்திறனாளிகள் - உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை (45 வயதுக்கு மேல் சுயசான்று வழங்க வேண்டும்)

மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.

மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப்படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்கவேண்டும். கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ மாணவியராக இருக்கக் கூடாது. ஆனால் தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பித்து பொது மனுதாரர்கள் 5 வருடங்கள், மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்று வேலையில்லாமல் காத்திருப்பவர் www.tnvelaivaaippu.gov.im என்ற இணையதளத்திலிருந்நோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ இப்படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

போட்டித் தேர்வுகளுக்கு இணைய தளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கும், தேர்வுமையங்களுக்கு சென்று வருவதற்காகவும் இத்தொகை வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் வேலைவாயப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் (2023-2024) இவ்வாண்டுக்கான சுயஉறுதிமொழி ஆவணம் 10 மே 2023 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் உடனடியாக மேற்கண்டவாறு படிவங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 May 2023 11:05 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி
  2. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  3. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  5. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  9. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  10. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா