/* */

தமிழக கவர்னரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, வரும் 29ல் சென்னையில் முற்றுகை; திருப்பூர் எம்.பி சுப்பராயன் தகவல்

தமிழக கவர்னரை, அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வரும் 29ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, திருப்பூர் எம்.பி சுப்பராயன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தமிழக கவர்னரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, வரும் 29ல் சென்னையில் முற்றுகை; திருப்பூர் எம்.பி சுப்பராயன் தகவல்
X

திருப்பூர் எம்.பி சுப்பராயன்.

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு அலுவலகத்தில் திருப்பூர் தொகுதி எம்.பி சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்தார். வரும் 29ம் தேதி, தமிழக கவர்னரை பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக அவர் கூறினார்.

மேலும், எம்.பி சுப்பராயன் கூறியதாவது;

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக, கடந்த எட்டு ஆண்டுகளாக திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மிகப்பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய பின்னலாடை உற்பத்தியை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாற்றக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சியை கைவிட்டு மத்திய அரசு பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, இந்தியாவில் உள்ள 23 பஞ்சாலைகள் மூலம், நூல் உற்பத்தி செய்யப்பட்டு அதனை அரசே கொள்முதல் செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்துவதன் மூலம் பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவதோடு, மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்திக்கான நூல் விலையில் மாற்றம் இல்லாமல் உரிய விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கையாக இருக்கும். மேலும், தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பருத்தி விளைச்சலை ஊக்கப்படுத்த மத்திய மாநில அரசுகள் சலுகைகள் மற்றும் மானியங்களை அறிவிக்க வேண்டும்.

கோவை, திருப்பூர் உள்ளிட்ட வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய தொழில் நகரங்களில் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு முழுமையான ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இதுகுறித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவிக்கப்படும்.

மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்படும் மத்திய அரசு நிதியிலும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அந்நிய செலவாணியை ஈட்டித் தரக்கூடிய திருப்பூர் மாவட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு திருப்பூர் மூலம் பெறும் வருவாயில் சில சதவீதத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சிறப்பு தகுதியின் அடிப்படையில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.

தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ் ஊழியர் போல் செயல்பட்டு வருகிறாார். அரசியலமைப்பு சட்டத்தின்படி வாழ வேண்டும் என்பதை கூறாமல் சனாதன தர்மத்தின் படி வாழ வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசி வரும் அவர் தனது பொறுப்புணர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது, மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிற 29ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு எம்.பி சுப்பராயன் கூறினார்.

Updated On: 19 Dec 2022 6:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  8. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  9. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  10. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!