/* */

திருப்பூர் பகுதிக்கு இடம் மாறியதா சிறுத்தை? தீவிர கண்காணிப்பு

அவினாசி அருகே, சோளம் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை, திருப்பூருக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் பகுதிக்கு இடம் மாறியதா சிறுத்தை? தீவிர கண்காணிப்பு
X

பொங்குபாளையம் பகுதியில் காணப்பட்டதாக கூறப்படும் சிறுத்தையின் கால் தடம்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம் பாப்பாங்குளம் ஊராட்சியில், விவசாய தோட்டத்தில் தங்கியிருந்து சிறுத்தை இரு விவசாயி, ஒரு வன ஊழியர் உட்பட, ஐந்து பேரை தாக்கியது.

சிறுத்தையை கண்காணிக்க வனத்துறையினர் மூலம், அங்குள்ள தென்னை மரம், தடுப்புவேலி உள்ளிட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. கூண்டு வைத்து, அதில் இறைச்சி வைக்கப்பட்டது. 'ட்ரோன்' மூலம், சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிறுத்தை அகப்படவில்லை.

இந்நிலையில், நேற்று, நியூ திருப்பூர் அருகேயுள்ள பொங்குபாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாக தகவல் பரவியது. 'அப்பகுதி மக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செசாங் சாய் அறிவிப்பும் வெளியிட்டிருந்தார்.

நேற்று காலை, இந்த இடத்தில் உள்ள விவசாய நிலத்தின் சிறுத்தையின் கால்தடம், எச்சம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் அதை ஆய்வு செய்து, சிறுத்தை நடமாட்டத்தை தெளிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பிடிபடாமல் போக்கு காட்டி வரும் சிறுத்தையால் அவினாசி, திருப்பூர் பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.

Updated On: 26 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  2. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  3. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  4. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  6. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  7. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  8. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  9. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  10. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு